தியேட்டரில் உட்கார்ந்து டிவிட்டரில் விமர்சனம் செய்யலாமா? நடிகர் சித்தார்த் கொந்தளிப்பு!


இன்று உலகம் முழுவதும் விக்ரம்,நயன்தாரா, நித்யா மேனன் நடித்த இருமுகன் திரைப்படம் ரிலீசாகியிருக்கிறது. காலையில் முதல் ஷோ பார்க்கும்போது சில டிவிட்டர் விமர்சகர்கள், ஒவ்வொரு சீனாக விமர்சித்து கொண்டிருந்தார்கள், டிவிஸ்ட்களையும் உடைத்துக் கொண்டிருந்தனர். டிவிட்டரில் இந்த விமர்சனங்களை கவனித்த சித்தார்த் பொங்கித் தீர்த்துவிட்டார்.

"ஒரு படத்தை பார்க்கும்போது, டிவீட் செய்ய முடிகிறதென்றால் உங்கள் மூளையால் ஒரு திரையை மட்டுமே கவனிக்க முடியும். நீங்கள் ஸ்க்ரீனை கவனிக்கிறீர்களா இல்லை உங்கள் மொபைல் ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?"

"நீங்கள் ஒரு படம் பார்த்து முடித்து விட்டு உங்கள் நண்பர்களிடம் படம் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை சொல்லலாம், உடனடியாக விரிவான ரிவ்யூ கூட எழுதலாம். ஆனால் படம் பார்த்து கொண்டிருக்கும்போதே டிவீட்டுவது சரியாகுமா? "

"ஒரு படம் பார்த்து முடித்து விட்டு உங்களுக்கு பிடித்திருந்தால், பிடித்தது என பகிருங்கள், பிடிக்காவிட்டால், எனக்கு பிடிக்கவில்லை என பகிருங்கள் ஆனால் ஒரு படத்தை தவிர்த்துவிடுங்கள் என ஆடியன்ஸிடம் பகிருவதை முதலில் நிறுத்துங்கள்"

" திரையரங்கில் நீண்ட நேரத்துக்கு யாராவது இனி ஸ்மார்ட்போனை நோண்டிக்கொண்டே இருந்தால் அவரை கண்டியுங்கள். ஏனெனில் நீங்கள் செலவு செய்த பணம் அந்த இருட்டு அறைக்குள் திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை பெறுவதற்குத்தான் " இவ்வாறு டிவிட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார் சித்தார்த்.

இதையடுத்து சித்தார்த்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கீச்சகர்கள் களமிறங்கியுள்ளனர்.

- பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!