ஹீரோவா காமெடியனா... வடிவேலு தீர்மானம்! #க்விக்-செவன்

ருமுகன் ரிலீஸாகிவிட்டது. அடுத்ததாக சாமி 2ம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விக்ரம். ஆனால் அதற்கு நடுவே கரிகாலன் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்காக இயக்குநர் தேடியபோது கண்ணில் பட்டவர் பிரம்மன் இயக்குநர் சாக்ரடீஸ்! உடனே ஓகே செய்துவிட்டார் விக்ரம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன. 


னுஷ், கீர்த்திசுரேஷ் நடிப்பில், பிரபுசாலமன் இயக்கியிருக்கும் படம் தொடரி, சென்சார் சென்று “யு” சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். வரும் செப்டம்பர் 22ம் தேதி ரிலீஸ். இப்படத்தில் தனுஷ் ரயில் கேன்டீன் ஊழியராக நடிக்கிறார். இசை டி.இமான்.


சீக்கிரமே தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் நடிகர் சங்கத்திலிருந்து போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுவந்தது. இதற்கான தகுந்த விளக்கத்தை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “ எங்கள் நிர்வாகிகளில் சிலர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்கள். அவர்கள்  தயாரிப்பாளர் சங்கத்துடனும் தொடர்புகொண்டவர்கள். அவர்களின் கருத்து தனிப்பட்டது. இதை நடிகர் சங்கத்துடன் தொடர்பு படுத்தி பார்க்கவேண்டாம். தவிர, தயாரிப்பாளர் சங்கம், சுதந்திரமாக தேர்தலை நடத்தி - அதன்மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். இதுவே எங்கள் நிலைப்பாடு” என்று கூறியுள்ளது. ஆமா விஷாலும் தயாரிப்பாளர் தானே! 


ணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாமிலி,ரோபோ சங்கர், ஜான்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் “வீரசிவாஜி”. இப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் சென்சார் சென்ற இப்படம், “யு” சான்றிதழ் பெற்றிருக்கிறது. வரும் செப்டம்பர் 23ல் படம் ரிலீஸ். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. 


டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோ அதர்வா.  அதர்வாவிற்கு நாயகி இன்னும் உறுதியாகவில்லை. தவிர, நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிப்பதாக செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் அதை படக்குழு மறுத்திருக்கிறது. இன்னும் கெளதம் மேனனிடம் இது பற்றி கேட்கவே இல்லை. அதற்குள் செய்தியா என்று மிரட்சியில் இருக்கிறதாம் படக்குழு. 


ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் “அடங்காதே”. இப்படத்தை புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சுரபி, தம்பிராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தவிர, முக்கிய கதாபாத்திரத்தில் மந்திராபேடி நடிக்கிறார். இவர் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்தவர். டிவி பிரபலமான இவர்  12 வருடம் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 


விஷாலுடன், காமெடி வேடத்தில் நடிக்கும் கத்திசண்டை படம் விரைவில் ரிலீஸாகப்போகிறது. இப்படத்தில் டாக்டர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறாராம். தவிர, ராகவா லாரன்ஸூடன் “சிவலிங்கா” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் வடிவேலு நடிக்கிறார். இனிமேல் ஹீரோவாக நடிக்கபோவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறாராம் வடிவேலு. காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தால் தட்டாமல் ஓகே செய்வார் என்றே சொல்லப்படுகிறது.  இதுவல்லவா, வடிவேலுவின் ரீ-எண்ட்ரி! 

-பி.எஸ்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!