நயனுக்குக் கிடைத்தது த்ரிஷாவுக்கும் கிடைக்குமா? | Trisha's Nayagi releasing on September sixteenth

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (13/09/2016)

கடைசி தொடர்பு:12:51 (13/09/2016)

நயனுக்குக் கிடைத்தது த்ரிஷாவுக்கும் கிடைக்குமா?

பேய் படங்கள் என்றாலே குஷியாகி, குறிவைத்து, மாதத்திற்கு ஒன்றாவது ரிலீஸ் செய்துவிடும், தேனாண்டாள் பிலிம்ஸின் அடுத்த  ரிலீஸ் நாயகி! 

முன்னதாக, சிபி  நடித்த "ஜாக்சன் துரை" மற்றும் சந்தானம் நடித்த "தில்லுக்குத் துட்டு" என்று இவ்விரு பேய் படங்களுமே  தேனாண்டாள் பிலிம்ஸூக்கு வசூல் ஹிட். 

வித்தியாசமான கெட்டப்புடன், த்ரிஷா களமிறங்கும் நாயகி படத்தின் அனைத்துக் கட்ட பணிகளும் முடிந்து,  ரிலீஸூக்கு ரெடி. காமெடி கலந்த பேய் படமாக இப்படம் உருவாகியிருக்கிறதாம். இப்படத்தை செப்டம்பர் 16ம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்திருக்கிறது. 

த்ரிஷாவின் மேனேஜரான கிரிதர் தயாரிக்க, கோவி எழுதி இயக்கியிருக்கிறார். தமிழகத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ், தமிழகத்தில் மட்டும் 200 திரையரங்குகளில் வெளியிடுகிறது. 

நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நயன்தாரா நடிக்கத்தொடங்கினார். அவரின் தோழியான த்ரிஷாவும், நயனின் மாயா பட வரிசையில் நாயகி ஆகியிருக்கிறார். நயனுக்கு மாயாவில் கிடைத்த ஹிட், த்ரிஷாவுக்கு நாயகியில் கிடைக்குமா?

-பி.எஸ்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்