இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? மினி டிரெய்லர்! #WeekEndMovies

இந்த வெள்ளிக்கிழமை கொத்துக்கொத்தா நிறைய படங்கள் ரிலீஸ்! படங்கள் பற்றியான முன்னோட்டம் நாங்க சொல்லுறோம்... டிக்கெட்ட புக் பண்ணி வீக் எண்டை என்ஞாய் நீங்க பண்ணுங்க! 

தமிழில்...  மொத்தமா ஐந்து படங்கள் ரிலீஸ்!  

நாயகி...  நயன்தாராவிற்கு மாயா எப்படியோ, அப்படியே த்ரிஷாவிற்கு “நாயகி” . கதாநாயகியை மையமாக கொண்ட த்ரில்லர் காமெடிப் படம்  நாயகி. முதன்முறையாக இரண்டு வேடத்தில் த்ரிஷா நடிக்கிறார். அதில் ஓர் கதாபாத்திரத்தில் 20 வயது பெண்ணாக வருகிறாராம். ஏற்கெனவே தெலுங்கில் ரிலீஸாகிவிட்டது.  இப்போது தமிழில். தமிழகத்தில் மொத்தம் 200 திரையரங்குகளில் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.   தேனாண்டள் பிலிம்ஸின் லக் தொடர்கிறதா என்பதை பார்ப்போம்!

சதுரம் 2.... சதுரம் முதல் பாகம் பார்த்த நியாபகம் இல்லையேன்னு பதறாதீங்க.... இரண்டாம் பாகம் தான் முதலில் ரிலீஸ். இதற்குப் பின்னர் தான் முதல் பாகம் ரிலீஸாகும்.(அட நெசமா பாஸ்!) கொலையும் கொடூர சம்பவங்களும் என ஹாலிவுட்டையே மிரட்டி எடுத்த படம் SAW. அந்தப் படத்தின் பாணியிலேயே தமிழுக்கு ஏற்றதுபோல பட்டி டிங்கரிங்குடன்  கதையை ரெடி செய்திருக்கிறார் இயக்குநர்  சுமந்த் ராதாகிருஷ்ணன்.  சஸ்பென்ஸ் த்ரில்லர். சமூகத்தின் மீது தனிமனிதனுக்கு வரும் கோபம் தான் படத்தின் ஒன் லைன்.   

பகிரி... “குண்டு வச்சா தீவிரவாதி! குடிக்கவைச்சா தேசியவாதியா?” என்று அனலை அள்ளித்தெளிக்கும் டைலாக்குகளுடன் அறிமுக இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் படம் பகிரி.  டாஸ்மாக் வைக்க ஆசைப்படும் ஹீரோ, அவனுக்கு உதவும் ஹீரோயின்(ப்ளஸ் நாயகியின் அம்மாவும்). ஆனால் மதுக்கடையை எதிர்க்கும் ஹீரோவின் அப்பா. இவர்களுக்கிடையேயான முக்கோண சிக்கல் சிதறல் கதையே பகிரி. அசரவைக்கும் டயலாக்குகள், டாஸ்மாக்கினால் ஏற்படும் பிரச்னைகள் என்று சமூக அக்கறையையும் படத்தில் பகிர்ந்திருக்கிறது இந்த பகிரி.  

உச்சத்துல சிவா...  வில்லன் நடிகர் கரண் நினைவிருக்கிறதா? ஹீரோவா கூட நடித்தாரே என்று நீங்கள் கேட்கலாம். கொக்கி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், தீநகர், மலையன், காத்தவராயன் என்று ஹீரோவாக ஒரு வலம் வந்தவர் கரண். அடுத்ததாக தானே தயாரித்து நடித்து உருவாகியிருக்கும் படம் உச்சத்துல சிவா.   ஹீரோயினாக நேகா மற்றும் ஆடுகளம் நரேன், இளவரசு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை வித்யாசாகர்.  இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 5மணிக்குள் நடக்கும் கதை களம் தான் இப்படத்தோட ஸ்பெஷல். 

சூர்ய காந்தி.... அதிர்ச்சி வேண்டாம் பாய்ஸ் & கேர்ள்ஸ். புரட்சித்தலைவியின் சீரிய நடிப்பில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியிருக்கும் படம் சூரிய காந்தி. இப்படம்  21 ஜூலை 1973ல் ரிலீஸானது. இதோ ஜெயலலிதா, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, சோ நடிப்பில் அதே சூரிய காந்தி படத்தை  டிஜிட்டலில் பார்த்து ரசிக்கலாமே ப்ரெண்ட்ஸ்!   

இந்தியில் ரெண்டு படங்கள் ரிலீஸ்... 

ராஸ் ரீபூட்...  அட இதுவும் ஹாரர் மூவி தான் பாஸ். விக்ரம் பட் இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி மற்றும்  Kriti Kharbanda நடிக்கிறார்கள். ராஸ் படங்களின் சீக்குவலில் வெளியாகும் நான்காவது பாகம் இது. லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ என்று டைமிற்கு நடிப்பில் கத்திவைத்தை கட்டும் இம்ரானை வித்தியாசமான கெட்டப்பில் பார்ப்பது, என இந்தி பட பிரியர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொண்டாட்டமாக இருக்கும்.

பின்க்..  பெங்காலி இயக்குநர் Aniruddha Roy இயக்கத்தில் அமிதாப், டாப்ஸி நடிக்கும் இந்திப் படம் “பிங்க்”. ஓர் இரவில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களும், அதில் பாதிக்கப்படும் டாப்ஸியும் அவரின் இரண்டு தோழிகளுமே முக்கிய கதாப்பாத்திரங்கள். அந்த பிரச்னையில் டாப்ஸிக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக அமிதாப் நடித்திருக்கிறார். இப்படத்தில் அமிதாப் பைபோலார் டிஸ் ஆர்டர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார். வலியும், உணர்வுமாக பயணப்படும் இப்படத்திற்கான டிரெய்லர் வெளியாகி தெறி ஹிட். 

ராபின்சன் க்ரூசே: தீவில் இருக்கும் மிருகங்களுடன் ஜாலிவாலி கலாட்டா காம்போ தான் ராபின்சன் க்ரூசே. குழந்தைகளுக்காகவே ஸ்பெஷலாக தயாராகிவரும் படத்திற்கு ஹாலிவுட்டில் செம மவுசு. விடுமுறையை எஞ்சாய் செய்து, மகிழ்ந்திருக்க வேண்டுமா இந்த படம் பெஸ்ட் சாய்ஸ். 

தி ஷாலோஸ்:  சுத்தியும் தண்ணி, சின்ன பாறையில் மாட்டிக்கொள்ளும் நாயகி. ஆழமில்லாத அந்த கடலில் இறங்கி, 25 அடி தூரத்தில் இருக்கும் கரைக்கு நீந்தி வருவதற்கு அது கடிச்சிடும்.  சுறா சார்... சுறா.... சுறாவிடம் சிக்கி தப்பிக்க திக்கித்திணரும் ஹீரோயின் Blake Livelyயின் அசாத்திய நடிப்பில் மிரட்டலாக உருவாகியிருக்கிறது ஷாலோஸ். தியேட்டரில் மிஸ் செய்தாலும் கவலை வேண்டாம். இதன் ஒரிஜினல் டிவிடி செப்டம்பர் 27 கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.   

தெலுங்கில் நிர்மலா கான்வெண்ட்... சாமுவேல் மனசுல சாந்தி.. சாந்தி மனசுல சாமுவேல்... நிர்மலா கான்வெண்டில் படிக்கும் இரண்டு பேரின் சுத்தமான காதல் கதை. ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த ஸ்ரேயா ஷர்மா தான் நாயகி. தவிர, நாகர்ஜூனா முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.  

-பி.எஸ்.முத்து-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!