தொப்புள் கொடி உறவுகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் போராட்டத்தில் தமிழ் திரையுலகம்!

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துத் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழ் திரையுலக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், “ கர்நாடகத்தில் தமிழ் மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, நாளை வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் நடக்கின்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்பட துறையும் கலந்து கொள்கிறது. நாளை நடக்கவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் எங்களது தமிழ் திரையுலகின் சார்பில் திரைப்பட படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உள்பட அனைத்து பணிகளும் நடைபெறாது என்றும் மேலும் திரையரங்குகளில் காலை முதல் மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ்த் திரைப்படத் துறையின் கூட்டமைப்பு அறிவிக்கிறது. 

தமிழக விவசாயிகளின் துயர்நீக்க தக்கநேரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென தீர்ப்பை பெற்று வந்த தமிழக முதல்வருக்கு தமிழ்த் திரையுலகின் சார்பாக நன்றி. 

மேலும், கர்நாடகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் கொடூரமாக தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழவேண்டும், ஒவ்வொரு வருடமும் காவிரி நீர் தடையின்றி தமிழக விவசாயிகளுக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்பதற்காக நமது தமிழக முயற்சிகளுக்கும் தமிழ்த் திரைப்பட துறையினர் முழு ஆதரவு கொடுப்போம் என்று உறுதிகூறுகிறோம்”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

-பி.எஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!