'நடிகை', 'முதல்வர்’ ஜெயலலிதா தெரியும்... பாடகி ஜெயலலிதா..?!

முத்துராமன் ஜெயலலிதா நடிப்பில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சூரியகாந்தி.  1973 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தை மீண்டும் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைத்து வெளியிட்டுள்ளார் முக்தா சீனிவாசன். 

இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், வாலியும் எழுதினர். சோ ராமசாமி, மேஜர் சுந்தர் ராஜன், மனோரமா முதலானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இன்றும் பலரது பேவரைட் லிஸ்ட்டில் இருக்கும் பாடலான "பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?" என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதோடு படத்திலேயே மேடையில் தோன்றி பாடவும் செய்திருப்பார்.

இந்த படத்தின் இன்னொரு ஸ்பெஷல் தெரியுமா?  

தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தன் சொந்த குரலில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். "நான் என்றால் அது அவளும் நானும்..." என்ற பாடலை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்தும், 'ஓ மேரி தில்ருபா' என்ற பாடலை டி எம் சௌந்தரராஜன் அவர்களுடனும் சேர்ந்து பாடியுள்ளார். மோகன் என்ற கதாபாத்திரத்தில் முத்துராமனும் ராதா என்ற கதாபாத்திரத்தில் ஜெயலலிதாவும் நடித்தனர். மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத கணவனின் பொறாமையால் நடக்கும் விளைவுகளே இப்படத்தின் கதை.


நான் என்றால் அது அவளும் நானும் பாடலை பார்க்க :  

 

ஓ மேரி தில்ருபா பாடலை பார்க்க  : 

 

 


- க. பாலாஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!