வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவுண்டமணி! | Goundamani lashes out the rumours regarding his health

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (18/09/2016)

கடைசி தொடர்பு:13:30 (18/09/2016)

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவுண்டமணி!

 

நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வந்தது.இதுகுறித்து அவரது செய்தியாளர் விஜயமுரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில், " அவ்வப்போது நடிகர் கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளைக் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை.சமீபத்தில்கூட இதே போல், நடிகை கே.ஆர்.விஜயா உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 


சற்றுமுன்பு இதுபற்றி கருத்து தெரிவித்த கவுண்டமணி, " உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கின்றது.புதிய படம் ஒன்றின் கதையைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்,அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்ரிக்கையாளர்களை சந்திக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். அவரது ரசிகர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்வும் கேட்டுக் கொண்டுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்