வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (19/09/2016)

கடைசி தொடர்பு:14:38 (19/09/2016)

சமந்தாவுக்கு இரண்டு கல்யாணம்..!

 

ஆந்திர சினிமா சாம்ராஜியத்தின்  ஜாம்பவான்கள் நாகேஸ்வரராவ், ராமா நாயுடு. இருவரது பேரன்தான்  நாகசைதன்யா.  நாகேஸ்வரராவ்  மகன் நாகார்ஜூனாவுக்கும் நடிகர் வெங்கடேஷின் தங்கை லட்சுமிக்கும் பிறந்தவர் நாகசைதன்யா. அதாவது நாகார்ஜூனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர். எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் இந்த குடும்பத்தில் குத்துவிளக்கு ஏற்றப் போகிற சமந்தாவுக்கு ஜாதகத்தில் உச்சம். ஆந்திர சினிமாவில் பிரபல புள்ளிகள் எல்லாம் சமாந்தாவை பார்த்து பொறாமைத் தீயில் பொசுங்கிக் கொண்டு இருக்கின்றனர். 
                               

சமீபத்தில்  மோகன்லால், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆந்திராவில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கும் 'ஜனதா கேரேஜ்' படத்தின் கதாநாயகி சமந்தா. தற்போது அந்தப்படக்குழு மேல் கடுங்கோபத்தில் கொந்தளித்து வருகிறார், சமந்தா. முதலில் படப்பிடிப்புக்கு சென்ற நேரங்களில் டைரக்டர், கேமராமேன் உட்பட  யூனிட் மொத்தமும் தன்னை படத்தின் ஹீரோயினாகவே மதிக்கவில்லை   என்று கோபப்பட்டார், சமந்தா. அதன்பின் அந்தப்பட ஆடியோ விளம்பரத்துக்கு அழைத்தபோது 'ஃபீவர்...' என்று சொல்லிவிட்டு தெலுங்கு விளம்பர படத்தில் கோல்கேட் சிரிப்போடு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். 


                                

 

 சமந்தா மீது ஆத்திரமான 'ஜனதா கேரேஜ்' படக்குழு படம் ரிலீஸானதும்  அந்த படத்தின் விளம்பர போஸ்டர்களில் கதாநாயகியான சமந்தா படத்தை சிறியதாக  வெளியிட்டது சமந்தாவுக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. அடுத்த கட்டமாக ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரேயொரு பாடலுக்கு  மட்டும் குத்தாட்டம் போட்ட காஜல் அகர்வாலையும், ஜூனியர் என்டிஆரையும் சேர்த்து பிரம்மாண்ட போஸ்டர் வெளியிட்டனர். பெரும் கோபத்துக்கு ஆளான சமந்தா தன் திருமணத்துக்கு  ஜூனியர் என்டிஆர் உட்பட 'ஜனதா கேரேஜ்' படக்குழுவையே அழைக்கக்கூடாது என்று  நாகசைதன்யாவுக்கு அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம்.


            

தற்போது படங்களில் அதிகம் கமிட் ஆகிக்கொள்வதில்லை என ட்விட்டரில் அறிவித்துள்ளார் சமந்தா." எப்போதும் போல், அதிக படங்களில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம், நல்ல கதாப்பாத்திரங்கள் இல்லாமல் இருப்பது தான்.தென்னிந்திய சினிமாவில், கதாநாயகிக்கு நல்ல அர்த்தமுள்ள கதாப்பாத்திரம் கிடைப்பதெல்லாம் இங்கு அரிது " என்றார்

 

அடுத்த ஆண்டு  நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது.திருமண தேதியை நாகர்ஜூனாவே அறிவிப்பார் என்றிருக்கிறார் நாகசைதன்யா. சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். நாகசைதன்யா இந்து குடும்பத்தைச்  சார்ந்தவர். முதலில் கிறிஸ்தவ முறைப்படி  தேவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில்  மணமக்கள்  இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு  திருமணம் செய்து கொள்கின்றனர். அதன்பிறகு இந்துமத கலாச்சார பண்பாட்டின்படி இரண்டாவது முறையாக நாகசைதன்யா சமந்தா கழுத்தில் தாலிகட்டி கல்யாணம் நடக்க இருக்கிறது. ஆக சமந்தாவுக்கு இரண்டுமுறை கல்யாணம் என்று முடிவு செய்துள்ளனர்.


- சத்யாபதி        

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்