கோல்டன் குளோபில் திரையிடப்படும் ப்ரியதர்ஷன் -பிரகாஷ்ராஜ் திரைப்படம்

ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்தபடியாக ஆங்கிலத் திரைப்பட விருதுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கோல்டன் குளோப் விருதுகள் தான். ஆஸ்கர் விருதுகளுக்கு சில மாதங்கள் முன்னர் நடக்கும் இவ்விழாவில் விருது வாங்கும் படங்கள் தான் , பெரும்பாலும் ஆஸ்கரிலும் வெல்லும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், 74-வது கோல்டன் குளோப் விருது விழா நடக்க இருக்கிறது. அதற்கு முன்னர் படங்கள் திரையிடும் பணி நடைபெறும். அதற்காக தேர்வாகி இருக்கிறது பிரகாஷ்ராஜ் நடித்த சில சமயங்களில் திரைப்படம். 


வரும் அக்டோபர் 6ம் தேதி அமெரிக்க நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தப்படம் பெவெர்லி ஹில்ஸில் திரையிடப்படுகிறது. படத்தின் இயக்குனர் ப்ரியதர்ஷன் இதுபற்றி கூறுகையில், "மொத்தம் 10 படங்கள் திரையிடப்படுகிறது. அவற்றுள் ஐந்து படங்கள் கோல்டன் குளோப் விருதின் இறுதிப் பட்டியலுக்கு செல்லும்.இந்தியாவில் இருந்து இறுதி கட்டத்துக்கு சென்ற ஒரே படம் இது தான் " என்றார். 


காலை ஒன்பது மணிக்கு AIDS பரிசோதனைக்கு வரும் எட்டு கதாப்பாத்திரங்களும், அவர்களின் அந்த நாள் நிகழ்வுகள் தான் படத்தின் ஒன்லைன். படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து இருக்கிறார் பிரகாஷ்ராஜ். படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். 

இதற்கு முன்னர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த காஞ்சிவரம் திரைப்பம், ,சிறந்த படம், சிறந்த நடிகர் (பிரகாஷ்ராஜ்) என இரு தேசிய விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!