ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

டூட்ஷி படத்தின் கதைதான் ரெமோவின் கதையா?

பெரிய நடிகனாகவேண்டும் என்று ஆசைப்படுகிறான் மைக்கேல் டோர்ஷி. அதற்காக ஒவ்வொரு சினிமா கம்பெனியாக வேலைத்தேடி அலைகிறான், வேலைத் தர யாரும் தயாராக இல்லாததால், பெண் வேடமிட்டு ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வெற்றியும் பெறுகிறான். எல்லோருடைய கண்ணும் டோர்ஷி மேல் தான். ஒரே நிகழ்ச்சியில் பிரபலாகும் இவர் டூர்தி மைக்கேல்லாக மாறிவிடுகிறார். அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் என்று கலக்குகிறார் . இவரின் நடிப்பு வாழ்க்கை, காதல் என்று காமெடி கலாட்டாவாக  ஹாலிவுட்டில் 1982ல் வெளியான படம் தான் “ டூட்ஷி” (Tootsie).

டூட்ஷி படத்திற்கான நியூ வெர்ஷன் டிரெய்லரை சமீபத்தில் பார்த்த நியாபகம் வருகிறதா? நேற்று வெளியாகி ஹிட்டடித்த ரெமொ டிரெய்லர் வீடியோ தான் அது. இரண்டு படத்திற்கான டிரெய்லரும் ஒன்றாக இருப்பதாக இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர். 

இரண்டு படங்களிலுமே, நடிகனாக ஆசைப்படும் ஹீரோ, அதற்காக பெண் வேஷம் போடுகிறான், அதே வேடத்தை தன் காதலுக்காகவும் பயன்படுத்திக்கொள்கிறான் என்பது போல டிரெய்லர் நகர்கிறது.  ஹாலிவுட்டில் வெளியான டூட்ஷி தான் தமிழுக்கு ஏற்ப ரெமோவாக உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

கமல் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அவ்வை சண்முகி, ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டடித்த மிஸஸ் டவுட் ஃபயர் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல இதுவும் ஹாலிவுட் கதை தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிக்கும் ரெமொ அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ்.  கதை எப்படியிருந்தாலும், அதை உருவாக்கும் விதம், புதிதான திரைக்கதை இவ்விரண்டுமே படத்தின் வெற்றியை தீர்மாணிக்கும். ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்கும். அதை செய்தாலே படம் ஹிட் தான், ரெமொ அதை நிகழ்த்துமா என்பதை பார்க்க அக்டோபர் 7வரை காத்திருக்கலாம். 

டூட்ஷி பட டிரெய்லருக்கு: 

 

 

-பி.எஸ்.

ரெமோ டிரெய்லருக்கு இங்கே க்ளிக்கவும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!