இந்த வாரம் என்ன படம் பாக்கலாம்? #WeekendMovies | Movies releasing on twenty third september

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (21/09/2016)

கடைசி தொடர்பு:14:10 (21/09/2016)

இந்த வாரம் என்ன படம் பாக்கலாம்? #WeekendMovies

இந்த வாரம் வெளியாக இருந்த வீரசிவாஜி பேக் அடிக்க, கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பதினொரு படங்கள் வெளியாகின்றன. என்னென்ன படங்கள் என்னென்ன கதை என க்விக் இன்ட்ரோ இதோ...

 

தொடரி:

தனுஷ் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கியிருக்கும் ரொமாண்டிக் த்ரில்லர் படம் . தனுஷின் 30வது படம் இது. டீவிற்கும் பூச்சியப்பன் ரோலில் தனுஷ், நடிகைக்கு மேக்-அப் அசிஸ்டெண்ட் மலையாலப் பெண் சரோஜாவாக கீர்த்தி சுரேஷ். ஓடும் ரயிலுக்குள் இவர்களுக்குள் இடையே காதல். நடுவே நடக்கும் ரயில் ஹைஜாக். அதன்பிறகு என்ன நடக்கிறது என போகிறது படம். வியாழக்கிழமையே (22) வெளியாகவிருக்கிறது தொடரி.

 

ஆண்டவன் கட்டளை:

ஒரு பாஸ்போர்ட் எடுக்க சென்று டாக்குமென்ட்டைத் தப்பாக எழுதி, அதனால் நடக்கும் பிரச்னைகள்தான் கதை. முழுக்க காமெடி + சின்ன மெசேஜுடன் தயாராகியிருக்கிறது படம்.  விஜய் சேதுபதி, நாசர், 'இறுதிச்சுற்று', ரித்திகா சிங், பூஜா தேவ்ரியா, யோகிபாபு, ரமேஷ் திலக் நடித்திருக்கும் இப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். 

 

பாஞ்சோ:  (இந்தி)

மராத்தியில் நடரங், பால்கந்தர்வா, டைம்பாஸ் போன்ற படங்கள் இயக்கிய ரவி ஜாதவ் இயக்கியிருக்கும் முதல் இந்திப்படம் பாஞ்சோ. ரிதேஷ் தேஷ்முக் ஒரு பாஞ்சோ இசைக்கலைஞர். அந்தக் திறமையின் மூலம் அவர் பேர், புகழ், வெற்றி எப்படி அடைகிறார் என்பதே கதை. ஹீரோயினாக நர்கீஸ் ஃபக்ரி நடித்திருக்கிறார். 

 

பார்ச்டு: (இந்தி)

நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் ஷப்த், தீன் பதி படங்களை இயக்கிய லீனா யாதவ் இயக்கியிருக்கும் படம் பார்ச்டு. இந்த வருடம் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகள் வெளியாகி சர்ச்சையானது. அவை இந்தப் படத்தின் காட்சிகள் தான். குஜராத்தை மையமாக கொண்ட கதைக்களம். பெண்களுக்கெதிரான  வன்முறைகள், குழந்தை திருமணம், பாலியல் வன்புணர்வு, விதவைகளுக்கான மறுவாழ்வு என்று சிக்கலான பல பிரச்னைகளை இப்படம் பேசுகிறது. 

 

வாஹ் தாஜ்: (இந்தி)

விவசாயிகளின் பிரச்சனையையும், ஊழல் நிறைந்திருக்கும் அரசாங்கத்தைப் பற்றியும் காமெடியாக சொல்லப் போகும் படம் வாஹ் தாஜ். ஹீரோ ஸ்ரேயாஷ் தல்பட் தாஜ்மஹால் தன் பரம்பரை சொத்து என்று கூறி போராட்டங்கள், டிவி பேட்டிகள் என பரபரப்பு கிளப்புகிறார், ஏன் எதற்கு என்று சொல்வதாய் நகர்கிறது கதை. மஞ்சரி ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் அஜித் சின்ஹா.

 

டேஸ் ஆஃப் டஃப்ரீ: (இந்தி)

குஜராத்தியில் வெளியாகி ஹிட்டடித்த 'சல்லோ திவாஸ்' படத்தின் இந்தி ரீமேக் தான் டேஸ் ஆஃப் டஃப்ரி . ஏழு நண்பர்களின் கல்லூரி வாழ்க்கை, கலாட்டாக்கள், காதல், அழுகை, பிரிவு என அப்படியே கல்லூரி காலத்தை நினைவுபடுத்தும் சினிமா என்கிறார் இயக்குநர் கிருஷ்ணதேவ் யாக்னிக். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கிறார்.

 

மஜ்னு: (தெலுங்கு)

'உய்யால ஜம்பாலாலா' பட இயக்குநர் விரின்சி வர்மா இயக்கியிருக்கும் படம் மஜ்னு. உதவி இயக்குநராக இருக்கும் நானி, இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் கலாட்டவான கதை தான் படம். ஹீரோயின்களாக அனு இமானுவேல், ப்ரியா ஸ்ரீ நடித்திருக்கிறார்கள். கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். 

 

ஒரு முத்தஷி கதா: (மலையாளம்)

நிவின் பாலி, நஸ்ரியா நசீம் நடித்து செம ஹிட்டான 'ஓம் ஷாந்தி ஓசன்னா' படத்திற்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருக்கும் படம் 'ஒரு முத்தஷி கதா'. லீலம்மா என்ற பாட்டி செய்யும் கலாட்டாக்கள் தான் கதை. ஓணம் ஸ்பெஷலாக சென்ற வாரமே கேரளாவில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது படம். ரஜினி சன்டி, வினித் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, விஜயராகவன், லீனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

 

த மேக்னிஃபிஷியன்ட் செவன்: (ஆங்கிலம்)

1954ல் அகிர குரசோவா இயக்கிய 'செவன் சாமுராய்' படத்தின் ரீமேக்காக 1960ல் ஜான் ஸ்டர்ஜ் இயக்கத்தில் 'த மேக்னிஃபிஷியன்ட் செவன்' வெளிவந்தது. தற்போது அந்தப் படம் அதே பெயரில் ஆண்டனி ஃபகுவா இயக்கத்தில் மறுபடி ரீமேக் ஆகியிருக்கிறது. ஒரு ஊரை காப்பாற்ற செல்லும் ஏழு வீரர்களில் கதை என்ற அதே ஒன்லைன் தான் இதிலும், ஆனால் டெக்னிகலாக படம் பிரம்மாணடமாக எடுக்கப்பட்டடிருக்கிறது. 

 

ஹவுல்: (ஆங்கிலம்)

பால் ஹையத் இயக்கியிருக்கும் 'ஹவுல்' சென்ற வருட அக்டோபரிலேயே வெளியாகிவிட்டது. தற்போதுதான்  இந்தியாவில்  வெளியாகவிருக்கிறது. பேசஞ்சர் ட்ரெய்ன் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் நின்றுவிடுகிறது. திடீரென அந்த இடத்தில் இருக்கும் வினோத உயிரினங்களால் தாக்கப்படவும் ஆரம்பிக்கிறது. அந்தப் பயணிகள் என்ன ஆகிறார்கள் என்கிற த்ரில்லர் தான் படம்.

 

ஸ்டோர்க்ஸ்: (ஆங்கிலம்)

நிக்கோலஸ் ஸ்டோலர் மற்றும் டாக் ஸ்வீட்லேண்ட் என்ற இரட்டை இயக்குநர்கள் இணைந்து இயக்கியிருக்கும் படம் 'ஸ்டோர்க்ஸ்'. முன்னொரு காலத்தில், குழந்தைகளை  இயந்திரத்தில் உற்பத்தி செய்து, வீட்டிற்கே அனுப்பிவைக்கும் வேலையை செய்யும் நாரைகள் கூட்டம் தான் ஸ்டோர்க்ஸ். ஒரு கட்டத்தில் இந்த வேலை நாரைகளுக்கு கடுப்பாக குழந்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்தையே இழுத்துமூடுகிறது. பின்னர் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை மட்டும் சரியான நேரத்திற்கு டெலிவரி செய்யும் வேலையை மட்டும் ஜாலியாகச் செய்கிறது. ஒரு ஜூனியர் நாரை செய்யும் தவறால் பயன்படாமல் இருந்த குழந்தை உற்பத்தி இயந்திரம் ஆக்டிவேட் ஆகிவிடுகிறது. பிறகு என்ன ஆகிறது என்பதை காமெடி கலாட்டாவாக சொல்கிறது படம்.

 

- பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்