விஷால் விளம்பர இசையை காப்பி அடித்த ஹாலிவுட் படம்!

 

ஹாலிவுட் படத்திலிருந்து ட்யூன் திருட்டு என்பது வழக்கமாக அடிக்கடி நடக்கும் ஒன்று தான். சமீபத்தில் நம்ம ஊர் இசையமைப்பாளர் போட்ட ட்யூன் ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லரில் இருந்ததைப் பார்த்து.... சாரி.... கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

டியர்ஸ் ஆஃப் சன், கிங் ஆர்தர், ஷூட்டர் போன்ற படங்களின் இயக்குநர் அன்டோனி ஃபுக்குவா இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படமான 'தி மேக்னிஃபீஷியன்ட் ஆஃப் செவன்' படத்தின் ட்ரெய்லர் தான் அது. அந்த ட்ரெய்லரில் ஒலிக்கும் பின்னணி இசை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே என யோசித்தால், அட! 'இப்போ புயல் வரும் பாருனு சொன்ன நம்ம விஷால் நடித்த விளம்பரத்தில் வரும் பாடல்' என பொறிதட்டியது. இதன் ஒரிஜினல் ட்யூன் இசையமைப்பாளர் ராம் சம்பத் (அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் பட இசையமைப்பாளர்) 2012ல் தம்ஸ் அப் விளம்பரத்துக்காக இசையமைத்தது. அதன் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் 'புயலாக ஏதாச்சும் செய்வோமா'. இந்த ட்யூன் எப்படி ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்தது? ஒரே மாதிரி இசை ராம் சம்பத்துக்கும்,  'தி மேக்னிஃபீஷியன்ட் ஆஃப் செவன்' இசையமைப்பாளர்கள் ஜேம்ஸ் ஹார்னர், சைமன் ஃப்ராங்ளனுக்கும் தோன்றியிருக்குமோ? 

 

2012, Original ad:

 

 

 

 

2015, 

 

 

 

2016, THE MAGNIFICENT SEVEN: 

 

 

 

-பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!