வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (26/09/2016)

கடைசி தொடர்பு:11:51 (26/09/2016)

கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு -தனுஷ்... இயக்கம் -செளந்தர்யா ரஜினிகாந்த்!

 

சென்ற வார நெட்டிசன்களின் பேசுபொருள் செளந்தர்யா ரஜினிகாந்த் தான். அவரது மண வாழ்க்கை பற்றி வந்த செய்திகளுக்கு தனது ட்வீட்டின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

கோச்சடையானை தொடர்ந்து இன்னொரு படம் இயக்கும் வேலையை தொடங்கிவிட்டார் செளந்தர்யா. இந்த முறை அவர் கையில் எடுத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை எழுதியவர்...தனுஷ்.!

பவர் பாண்டி மூலம் இயக்குநராகும் தனுஷ், தனது இன்னொரு ஸ்க்ரிப்ட்டை செளந்தர்யாவுக்கு தந்ததோடு மட்டுமில்லாமல், படத்தை வுண்டர்பார் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். ஏற்கனவே தனுஷை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை சொல்லியிருந்தார் செளந்தர்யா. இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பதை தெரிந்துக் கொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

படத்துக்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் ரஜினி படம், அவரது மகள் இயக்கும் படம் இரண்டையும் தயாரிக்கிறார் தனுஷ்.


வாழ்த்துகள் செளந்தர்யா!


-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்