வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (26/09/2016)

கடைசி தொடர்பு:13:47 (26/09/2016)

ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா... சுஹாசினி... ஊர்வசி... குஷ்பு! #EightiesHeroines

 

மைக்கேல் மதன காமராஜன் -திருபுரசுந்தரி (ஊர்வசி)
சிந்து பைரவி -சிந்து (சுஹாசினி)
மன்னன் - மீனா  (குஷ்பு)
ரெட்டை வால் குருவி - கவிதா (ராதிகா)


தமிழ் சினிமா ரசிகர்கர்களின் மனதில் Alt+shift+del செய்ய முடியாத பெண் கேரக்டர்களில் இந்த நான்கு பேரும் முக்கியமானவர்கள். ஊர்வசி, சுஹாசினி, குஷ்பு, ராதிகா ஆகிய நால்வருக்குமே இவை மிக முக்கியமான படங்கள்.


இந்த கேரக்டர்கள் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்புகிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் இந்தப் படத்தில் நால்வரும் அதே கேரக்டரில் வருகிறார்கள். பல வருடங்கள் கழித்து சந்திக்கும்இந்த நண்பர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது, என்ன பிரச்னைகள் என கதை போகிறது.


இன்று ஆஸ்திரேலியாவில் முதல்நாள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த ரீக்ரியேஷன் மேஜிக்கை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

- கார்க்கிபவா

 

பழைய கேரக்டர்களை ரீக்ரியேட் செய்வது...
சுவாரஸ்யமானதுதான்...
கிளாஸிக்குகள் மேல் கை வைக்க கூடாது பாஸ்!
பார்க்கலாம்...
ஆர்வமில்லை...
polls
 
 
 
 
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்