அப்பாவுக்கு விஜய், சித்தப்பாவுக்கு அஜித், மகனுக்கு ஜெயம்ரவி! | chiranjeevi family doing tamil remakes

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (27/09/2016)

கடைசி தொடர்பு:01:52 (16/03/2017)

அப்பாவுக்கு விஜய், சித்தப்பாவுக்கு அஜித், மகனுக்கு ஜெயம்ரவி!

ரீமேக் எல்லாம் சர்வசாதாரணமான ஒன்று தான். ஆனால் டோலிவுட்டில் இந்த மூன்று ரீமேக்குகள் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம் ஒரே குடும்பத்தைச் சேந்த மூவர், ஒரே நேரத்தில் மூன்று தமிழ் படங்களின் ரீமேக்கில் நடிப்பது கொஞ்சம் ஸ்பெஷல் தானே. 

அப்பாவுக்கு விஜய், சித்தப்பாவுக்கு அஜித், மகனுக்கு ஜெயம்ரவி புரியவில்லையா, தொடர்ந்து படியுங்கள்....

கைதி 150:

தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நடித்த 'கத்தி' படத்தின் ரீமேக் தான் 'கைதி நம்பர் 150'. சிரஞ்சீவி நடித்து தெலுங்கில் மிகப் பெரிய ஹிட்டான படம் கைதி என்பதாலும், இது சிரஞ்சீவியின் 150வது படம் என்பதாலும் படத்துக்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டது. சமந்தா ரோலில் காஜல் அகர்வால் நடித்துவருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் , வி.வி.நாயக் இயக்கும் இப்படத்தை தயாரிப்பது சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். படம் 2017 பொங்கல் ரிலீசாக வரவிருக்கிறது.

காட்டமராயிடு:

இதுவும் கோலிவுட் டூ டோலிவுட் ரீமேக் தான். அஜித் தமன்னா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய 'வீரம்' படத்தின் தெலுங்கு வெர்ஷன் தான் 'காட்டமராயிடு' தமன்னா ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அதே 'அண்ணன்டா.... தம்பிங்கடா..." கதை தான். இந்தியில் ஹிட்டடித்த 'ஓ மை காட்' படத்தை பவன் கல்யாண், வெங்கடேஷ் நடிப்பில் 'கோபாலா கோபாலா'வாக ரீ மேக்கிய கிஷோர் குமார் பர்தசானி இயக்குகிறார். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் படம் பற்றிய அப்டேட்கள் எல்லாம் வீரம் படத்தின் கதையை ஒத்ததாகவே இருக்கிறது. விரைவில் இதன் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். படம் 2017 ஏப்ரல் ரிலீஸ்.

துருவா:

தமிழில் தாறுமாறு ஹிட்டான 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் துருவா. அதுவரை ரீமேக் ராஜா என்று இருந்த முத்திரையை ஒரே படத்தில் கிழித்தெரிந்து மோகன் ராஜாவுக்குப் பெயர் பெற்றுத்தந்தது. இதன் ரீமேக்கில் ஜெயம் ரவி நடித்த ரோலில் ராம் சரண் நடித்திருக்கிறார். நயன்தாரா ரோலில் ரகுல் ப்ரீத் சிங், அர்விந்த் சுவாமி நடித்த ரோலில் அவரே நடித்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்துக்கு, ஆரண்ய காண்டம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது.

-பா.ஜான்சன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close