’மேனேஜர் மூலமா ப்ரேக் அப் செய்வது?!’ - வரலட்சுமி நக்கல்

காதலிப்பதும், காதலித்தவரை ப்ரேக் அப் செய்வதும், திரையுலகில் சர்வ சாதாரணமாக நடப்பது.  வரலட்சுமியின் ப்ரேக் அப் ட்விட், ஒட்டுமொத்த ட்விட்டரையே அதிரடித்துவிட்டது. 

வரலட்சுமி தன்னுடைய டிவிட்டரில், “ ஏழு வருடமாக இருந்த காதல் உறவை, ஒருவர் உடைத்துவிட்டார். அந்த செய்தியை தன்னுடைய மேனேஜர் வழியாக சொல்லியிருக்கிறார். உலகம் எங்கே போகிறது?  காதல் எங்கே இருக்கிறது?” என்று ட்விட் செய்துள்ளார். 

பொதுவாக, நடிகர் நடிகைகள் காதலித்தால்அந்த செய்திகள் தான் முதலில் வெளியாகும்.  ஆனால் வரு தன்னுடைய காதலர் யாரென்பதையும் குறிப்பிடவில்லை.  தன் ப்ரேக் அப்பை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.  தவிர, வரலட்சுமிக்கும் விஷாலுக்கும் காதல் இருப்பதாக கோலிவுட் முன்னரே கிசுகிசுத்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் வரலட்சுமியின் இந்த ட்விட், ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை எற்படுத்தியிருக்கிறது. வரலசுமியின் காதலன் யார்? ஏன் இந்த ட்விட் என்பதே மர்மமாக இருக்கிறது. 

மேனேஜர் மூலம் சொல்லிவிட்ட அந்த திமிர் நாயகன் யார் என்பதே ரசிகர்களின் முதல் கேள்வி!

 

 

-பி.எஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!