ட்ரிபிள் டிக் வித்யா பாலன்... என்ன விசேஷம்?

சின்ன ரோலோ, லீட் ரோலோ அசத்தல் பெர்ஃபாமன்ஸைக் கொடுத்து மிரட்டுபவர் வித்யா பாலன் 'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி' என அடுத்தடுத்து இரண்டு பெரிய ஹிட், அதுவும் காமாசோமா ஹீரோயினாக இல்லாமல் லீட் ரோலில் நடித்து. பிறகு ஷாதி கீ சைட் எஃபக்ட்ஸ், பாபி ஜஸுஸ், ஹமாரி அதூரி கஹானி என வரிசையாக மூன்று ஃப்ளாப்கள். அதன் பிறகு இந்தியில் தீன், மராத்தியில் ஏக் அல்பிலா படங்களில் சின்ன ரோல்களில் நடித்தார். மீண்டும் பெரிய ரோல்களில் வித்யா நடிப்பாரா இல்லையா எனத் தேடிய போது சிக்கின மூன்று படங்கள்.

 

கஹானி 2: 

2012ல் சுஜய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த கஹானியின் சீக்குவல் தான் கஹானி 2. ஆனால், கதை முதல் பாகத்தில் வந்ததன் தொடர்ச்சியாகவோ, அதே களமாகவோ இருக்காது என்று சொல்கிறார் இயக்குநர். ஜூன் மாதமே ஷூட்டிங் முடிந்துவிட்டது. படத்தை நவம்பர் 25ல் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். 

 

பேகம் ஜான்:

பெங்காலியில் சென்ற வருடம் வெளியான ராஜ்கஹினி படத்தைத் தழுவி இந்தியில் எடுக்கப்படும் படம் பேகம் ஜான். பெங்காலி சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி. அவர் இயக்கிய ஆட்டோகிராஃப், பாய்ஷி சரபோன், ஜாதீஷ்வர், சோதுஷ்கோன் போன்ற படங்களுக்காக தேசிய விருது பெற்றவர். பேகம் ஜான் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். 1947ல் நிகழ்ந்த இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது அதில் பாதிப்புக்குள்ளாகும் ஒரு விபசார விடுதியும் அதில் உள்ள பதினொரு பெண்களின் நிலையும், அவர்களின் போராட்டமும் தான் கதை.'ராஜ்கஹினி'யில் அந்த விடுதியில் தலைவியாக ரிதுபர்னா சென்குப்தா நடித்த ரோலில் தான் நடித்திருக்கிறார் வித்யா பாலன். படம் 2017 ஜனவரி 6ம் தேதி வெளியாகிறது.

ராஜ்கஹினி ட்ரெய்லர்: 

 

 

 

ஆமி:

சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கான 'தி டர்டி பிக்சர்' படத்துக்குப் பிறகு வித்யா நடிக்கும் அடுத்த பயோபிக் மலையாளத்தில் தயாராகும் 'ஆமி'. ஆங்கிலம், மலையாளத்தில் மிகவும் பிரபலமான எழுத்தாளர் மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ். ஆமி படத்தில் கமலா தாஸாக நடித்துக் கொண்டிருக்கிறார் வித்யா பாலன். ஜே.சி.டேனியல் வாழ்க்கையை 'செல்லுலாய்ட்' படம் மூலம் பதிவு செய்த இயக்குநர் கமல் தான் 'ஆமி' படத்தையும் இயக்குகிறார். 

எனவே ரசிகர்களே இந்த ஆண்டு நவம்பர் முதல் வித்யாபாலனின் வெரைட்டியான நடிப்பை நீங்கள் கண்டுகளிப்பீர்கள் என உறுதியாக நம்பலாம். 

-.பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!