அட... சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ்!

 

ஏற்கெனவே  ரஜினி நடிப்பில் 'கபாலி' படத்தை தயாரித்த 'கலைப்புலி'  தாணு  அடுத்து செளந்தர்யா சொன்ன ஒன்லைன்  கதை கேட்டவுடனே ' இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்மா' என்று உடனே வாக்குத்தர 'தேங்யூ அங்கிள்... தேங்க்யூ அங்கிள்...' என்று நெகிழ்ந்துபோய் நன்றி சொல்லி இருக்கிறார். செளந்தர்யா.செளந்தர்யா இயக்கும் படத்தின்  ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது பளீரென கண்முன் வந்து நின்றவர் பழம்பெரும் நடிகர் பாலாஜியின் பேரனும், மலையாள சூப்பர் ஸ்டார்  மோகன் லாலின் மகனுமான ப்ரணவ்.  ஏற்கனவே  'கபாலி' படத்தின் விநியோக உரிமையை பெற்று லாபம் பார்த்தவர் மோகன்லால்.  


 2002-ல்  தனது 14-ம் வயதில் 'புனர்ஜனி' மலையாள படத்தில் நடித்தார், ப்ரணவ். 'காதலா காதலா', 'பஞ்சதந்திரம்' 'வல்லவன்' படங்களின் தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய துணைத்தலைவருமான பி.எல்.தேனப்பன் 'புனர்ஜனி' படத்தை தயாரித்தார்.  2002-ம் ஆண்டுக்கான கேரளாவின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில விருதை ப்ரணவ் பெற்றார்.


ஒருநாளும் தன்னை  மலையாள சூப்பர் ஸ்டார் மகன் என்று ப்ரணவ் காட்டிக் கொண்டதே இல்லை.  தன் வீட்டில் ஏகப்பட்ட கார்கள் இருந்தாலும் அடிக்கடி ஆட்டோவிலும், பேருத்துகளிலும் மக்களோடு மக்களாக பயணிக்கும் பழக்கம் உடையவர். ப்ரியதர்ஷனிடம் உதவி டைரக்டாக வேலை பார்த்து வந்தார்.  செளந்தர்யா இயக்கும் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து ப்ரணவ்விடம் கேட்டு இருக்கிறார்கள். 'எனக்கு டைரக்‌ஷன் மேலதான் இன்ட்ரஸ்ட், ஹீரோவா நடிக்கறதா இருந்தா என்னோடம் முதல்படம் மலையாளம்தான்' என்று தெளிவாகச் சொல்லி விட்டாராம்.த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குனர் ஜீத்து ஜோசபிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார் ப்ரணவ். தற்போது, ஜீத்து ஜோசபின் புதுப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார்.இதை மோகன்லாலே தனது ட்விட்டர் ஐடி மூலம் உறுதிப்படுத்தினார்.


 அடுத்து நாகார்ஜூனா, அமலாவுக்கு பிறந்த அகில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்கள். ரஜினியிடமும் படத்தைப் பற்றி டிஸ்கஸ் செய்து இருக்கிறார் சௌந்தர்யா. படத்தில் நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறதே, தனுஷ் நடித்தால் நன்றாக இருக்குமே, எதுக்கும் அவரிடம் கேட்டுப் பார்க்கவும் என ஐடியா தந்து இருக்கிறார்.


ஒரு பக்கம் 'பவர் பாண்டி'பட  டைரக்‌ஷன், இன்னொரு பக்கம் ஒண்டர் பிலிம்ஸ் தயாரிப்பு, நடுவில் 'வடசென்னை' படத்தில் நடிப்பு என்று இருக்கும் தனுஷிடம் செளந்தர்யா இயக்கும் படத்தின் கதையை சொல்ல டபுள் ஒ.கே சொல்லி விட்டாராம், தனுஷ். தற்போது திரைக்கதை, வசனம் விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், செளந்தர்யா. 'கபாலி' படத்தின் 100-வது நாளில்  செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின்  பெயரை அறிவிக்கிறார், 'கலைப்புலி' தாணு. 


- சத்யாபதி  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!