செல்வாவின் டபுள் ட்விட்... தனுஷின் பதில் ட்விட்... ட்விட்டர் அதகளம்!

 

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துவரும் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து  ரெடி. படத்தை பார்த்த செல்வராகவனின் ட்விட், 

“ நெஞ்சம் மறப்பதில்லை ஃபைனல் அவுட்புட் பார்த்ததும்,  எஸ்.ஜே. சூர்யாவிற்கு ராக் ஸ்டார் பட்டம் கொடுக்க விரும்புகிறேன்.... ராக் ஸ்டார் எஸ்.ஜே.சூர்யா” என்று ட்விட்டியுள்ளார். 

எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு இந்தப் படத்தில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு சைக்கோ வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தன்னுடைய கெளரவத்திற்காக , பணக்கார பெண்ணான நந்திதாவை மணந்துகொள்கிறார் எஸ்.ஜே. இவர்களது வீட்டில் நடக்கும் சம்பவமே படம் என்று சொல்லப்படுகிறது. தவிர, ரெஜினா இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்திருக்கிறார்.  மூன்று இயக்குநர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் ப்டம் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு ஏறியிருக்கிறது.

செல்வராகவனின்  அடுத்த ட்விட்....பவர் பாண்டி ! 

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துவரும் “பவர் பாண்டி”யின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தேனி சென்றிருக்கிறார்கள். 

பிரசன்னா, சாயா சிங் இருவரும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். தவிர, சிறப்புத் தோற்றத்தில்  கெளதம் மேனன் நடித்திருக்கிறார். கெளதமிற்கான படப்பிடிப்பு சென்னையில் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. 

சென்னையில் நடந்த படப்பிடிப்பு காட்சிகளின் எடிட்டிங் தற்பொழுது நடந்துவருகிறதாம். அதற்கான ரஷ் கட்சிகளை செல்வராகவன் பார்த்திருக்கிறார். பின்னர் ட்விட்டரில், “ மேஜிக்கல் , காமெடி மற்றும் மனதைத் தொடும்படியான படமாக இருக்கும். தனுஷை நினைத்துப் பெருமைப்படுகிறேன். உங்கள் நடிப்பு சூப்பர், நன்றி ராஜ்கிரண் சார் “ என்று டிவிட் செய்துள்ளார்.

” உங்களுக்கு பவர்பாண்டி பிடித்திருப்பது, எனக்கு உற்காகமாகவும், த்ரில்லாகவும் இருக்கிறது. மிக்க நன்றி செல்வா... எல்லா புகழும் உங்களுக்கே!” என்று பதிலுக்கு ட்விட் செய்துள்ளார் தனுஷ். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!