Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரெமோ,றெக்க, தேவிலாம் ஒதுங்குங்க... வருது பிரேமம்! #WeekEndMovies

ஆயுத பூஜை விடுமுறைகளைக் குறிவைத்து இந்த வாரம் நிறைய படங்கள் வெளியாகிறது. என்னென்ன படம்? என்னென்ன கதை? இதோ..

தமிழ்

ரெமோ:

'ரஜினி முருகன்' ஹிட்டுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம். நர்ஸ் வேடத்திலும் நார்மல் வேடத்திலுமாக டூயல் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷை காதலிக்க வைக்க நர்ஸ் வேடத்தில் கீர்த்தி வேலை பார்க்கும் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்கிறார். அதன் பின் நடக்கும் காமெடி கலாட்டாக்களே கதை. இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கிறார். அனிருத் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என செம டீம் இணைந்திருக்கிறது. 

தேவி:

தமிழில் தேவி, தெலுங்கில் அபிநேத்ரி, இந்தியில் துக் துக் துதியா என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் மும்மொழி சினிமா. பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், நாசர், ஆர்.ஜே.பாலாஜி, கெஸ்ட் ரோலில் எமி ஜாக்சன் நடித்திருக்கும் படம். கிராமத்தில் தமன்னாவை திருமணம் மும்பைக்கு வருகிறார் பிரபுதேவா. அவர் தங்கியிருந்த வீட்டில் இருக்கும் ரூபி என்ற பெண்ணின் ஆவி தமன்னாவுக்குள் புகுந்து கொள்கிறது. அதற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு சில கண்டிஷென்களுடன் ஒத்துக் கொள்கிறார் பிரபுதேவா. ஆவி  தமன்னாவை விட்டு வெளியேறியதா என்ன ஆனது என்பது தான் கதை. 

றெக்க:

அருண்விஜய் நடிப்பில் வா டீல் படம் இயக்கிய ரத்தின சிவா இயக்கியிருக்கும் படம் றெக்க. விஜய்சேதுபதி, நாசர், லட்சுமி மேனன், கிஷோர், சதீஷ், ஹரீஸ் உத்தமன் நடித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதி வக்கீல் வேடத்தில் நடிக்கிறார், எதிர்பாரத விதமாக லட்சுமி மேனனை கடத்துவதும் அதனால் வரும் பிரச்சனைகளையும்  ஆக்‌ஷன் எண்டெர்டெயினராக சொல்கிறது படம். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்தி

மிர்ஸயா:

ரங் தே பசந்தி, டெல்லி 6, பாஹ் மில்கா பாஹ் படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கியிருக்கும் அடுத்த படம். பஞ்சாபின் ஐந்து சோகக் காதல் கதைகளில் ஒன்று தான் மிர்ஸா - சாகிபான் கதை. அந்தக் கதையையும், இன்னொரு நிகழ்காலக் கதையையும் இணைத்து மிர்ஸயா படத்தை இயக்கியிருக்கிறார் ராகேஷ். மிர்ஸா தன் காதலி சாகிபானை திருமண வீட்டிலிருந்து அழைத்துவரும் வழியில் சாகிபானின் உறவினர்களால் இருவரும் கொல்லப்படுவது தான் கதைச் சுருக்கம். இன்னொரு நிகழ்காலக் கதை என்ன என்பதை நாம் திரையரங்கில் தான் காண வேண்டும். ஹர்ஷவர்தன் கபூர், ஷயாமி கெர், ஓம் புரி, அஞ்சலி பாடில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஷங்கர்-எஷான்-லாய் இசையமைத்திருக்கிறார்கள்.

 

மலையாளம்

புலிமுருகன்:

போக்கிரி ராஜா, கிரிஸ்டியன் பிரதர்ஸ், மாயமோகினி, கம்மத் & கம்மத் போன்ற பல படங்கலுக்கு கதை எழுதிய உதய்கிருஷ்ணா&சிபி.கே.தாமஸ் கூட்டணியிலிருந்து பிரிந்து உதய்கிருஷ்ணா மட்டும் எழுதியிருக்கும் கதை தான் புலிமுருகன். விஷாக் இயக்கியிருக்கிறார். புலிமுருகனாக மோகன் லால் நடித்திருக்கிறார். கமலினி முகர்ஜி, கிஷோர், ஜெகபதி பாபு, ரம்யா நம்பீசன், நமீதா நடித்திருக்கிறார்கள். படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

 

தெலுங்கு

பிரேமம்

பிரேமம் மலையாளத்தில் வெளியான போது கூட லேட் பிக்கப் தான். ஆனால் அதன் தெலுங்கு ரீமேக்கிற்கு பயங்கற எதிர்பார்ப்பு இருக்கிறது. அது பாசிட்டிவ்வாகுமா, நெகட்டிவாகுமா என்பது படம் வெளியானபிறகு தான் தெரியும். நாக சைத்தன்யா, ஸ்ருதிஹாசன், மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்கிறார்கள். ஒரிஜினலுக்கு பிரேமம் படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசனுடன் கோபி சுந்தரும் இணைந்து இசையமைத்திருக்கிறாகள். தெலுங்கில் 'கார்த்திகேயா' படம் இயக்கிய சந்தூ மொன்டிட்டி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

ஆங்கிலம்

மிஸ் ப்ரெஜிரின்ஸ் ஹோம் ஃபார் பெக்யூலியர் சில்ரன்ஸ்:

2011ல் ரேன்சம் ரிக்கிஸ் எழுதி இதே பெயரில் வெளிவந்த நாவல் தான் இந்த சினிமா. ஊருக்கு ஒதுக்குப் புறமாக அல்மா ஒரு வீட்டில் ஸ்பெஷல் பவர்கள் உள்ள குழந்தைகளை ரகசியமாக வளர்த்து வருகிறார். எம்மா ப்ளூம் மூலம் இந்த இடத்திற்கு வருகிறான் ஜேக். ஜேக் தான் வரவிருக்கும் ஆபத்திலிருந்து தங்களை காப்பாற்றப் போகிறான் என நம்புகிறார்கள் அந்த வீட்டினர். ஆனால் ஜேக் தனக்கு எந்த சக்தியும் கிடையாது என சொல்கிறான். என்னா ஆபத்து? ஜேக்கிற்கு இருக்கும் பவர் என்ன? எப்படி அவர்களை காப்பாற்றினான்? இது தான் படத்தின் கதைச்சுருக்கம். சார்லி அண்டு தி சாக்லேட் ஃபேக்ட்ரி, ஆலிஸ் இன் தி வண்டர்லேண்ட் படங்களை இயக்கிய டிம் புர்டன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 

குயின் ஆஃப் கேத்வி

உலக செஸ் சேம்பியன் ஆகும் உகாண்டா சிறுமியின் கதை தான் குயின் ஆஃப் கேத்வி. மீரா நாயர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். உகாண்டாவில் ஒரு சேரியைச் சேர்ந்த பியோனா என்ற பத்து வயதுச் சிறுமி சதுரங்க விளையாட்டின் மூலம் புகழடைந்த நிஜ கதையை 'குயின் ஆஃப் கேத்வி: எ ஸ்டோரி ஆஃப் லைஃப், செஸ் அண்ட் ஒன் எக்ஸ்டிராடினரி கேர்ள்ஸ் ட்ரீம் ஆஃப் பிகமிங் எ கிராண்ட்மாஸ்டர்' என டிம் க்ரோத்தர்ஸ் எழுதிய புத்தகத்தை மையமாக வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். 

 
இந்த வாரம் உங்கள் சாய்ஸ் என்ன படம்?
ரெமோ
றெக்க
தேவி
ப்ரேமம் (தெலுங்கு)
மிர்ஸ்யா (இந்தி)
புலிமுருகன் (மலையாளம்)
online poll creator
 
 
 
 
 
 

 

- பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory