ஜி.வி.பிரகாஷுக்காக ஏ.ஆர்.ரகுமான் போட்ட 9 பாடல்கள்! #க்விக்செவன்

 படப்பிடிப்பு தொடங்கும்போதுதான், படத்திற்கானப் பாடலை முடித்துகொடுப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், அக்கா பையன் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கானப் பாடலை, படம் தொடங்குவதற்கு முன்னரே முடித்துக் கொடுத்துவிட்டார். ஒன்பது பாடல்களும் வேற லெவல் என்கிறார்கள். மியூசிகல்  படமாக உருவாகவிருப்பதால், பாடல்களைவைத்து தான் காட்சிகளை படமாக்கவிருக்கிறார்களாம். ராஜீவ் மேனன் நவம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார். சாய்பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்தவருட சம்மர் ரிலீஸ். ஏ.ஆர்.மயம்!  

 ராஜேஷ் படமென்றாலே, க்ளைமேக்ஸில் கவுரவத் தோற்றத்தில் யாராவது நடிப்பது வழக்கமே. “கடவுள் இருக்கான் குமாரு” படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள், சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில், சந்தானம் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜீவா தான் இந்தப் படத்தில் ஸ்பெஷல் கெஸ்ட். ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி என்று ஜாலி டீமின் காமெடி கேரண்டி. ப்ரெஷ்ஷா இருக்கீங்க.. வாங்க ஜி!   

 கிராமமும் கிராம நிமித்தமாகவே அடுத்தப் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சசிகுமார். அறிமுக இயக்குநர் பிரகாஷின் பெயரிடப்படாத இப்படத்தில், சசிகுமாரின் ஜோடி தன்யா. இவர், பழைய இயக்குநர் ரவிசந்திரனின் பேத்தி. கிடாரி படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா தான் இப்படத்திலும் இசை. சசிகுமாரின் கம்பெனி புரெடக்‌ஷன் தயாரிக்கும் இப்படம், முந்தைய படம் போல் இல்லாமல், முழுக்க முழுக்க காமெடியாக உருவாகிவருவதாக தகவல். தவிர, கோவை சரளா முக்கிய ரோலில் நடிக்கிறார். கிராமத்து காமெடி!

 நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்க, அதர்வா, ராஷி கண்ணா என்று வெரைட்டியான காம்போவுடன் களமிறங்குகிறார், டிமான்டி காலனி பட இயக்குநர் அஜய்ஞான முத்து.“இமைக்கா நொடிகள்” என்ற டைட்டிலுடன், இந்தமாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் வில்லன் ரோலுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறது படக்குழு. இவர்களின் முதல் சாய்ஸ், இந்தி இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யாப். இவருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள், ஆனால் இன்னும் முடிவாகவில்லை என்று சொல்லப்படுகிறது. வேற லெவலில் படத்தை உருவாக்க திட்டமாம். சர்ர்ர்ரிரிரி... 

 பாகுபலியில் வயதான பல்வாள் தேவன் கதாபாத்திரத்திற்கு, உறுதியான உடலமைப்பும், கட்டுமஸ்தாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக 110 கிலோ வரைக்கும் உடல் எடையைக் கூட்டியவர் ராணா. இரண்டாம் பாகத்தில், சிறுவயது பல்வாள் தேவன் கதாபாத்திரத்திற்காக, 90 கிலோவரைக்கு உடல் எடையைக் குறைக்கிறார். அதற்காக கடந்த ஐந்து மாதங்களாக, உடற்பயிற்சிக் கூடத்திலேயே செட்டிலாகிவிட்டார். தினமும் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி, டயட் என்று உடலை செதுக்கியுள்ள புகைப்படம் சமீபத்தில் செம வைரல். பலே பல்வாள் தேவா... 

 தயாரிப்பு கெளதம் மேனன், இயக்கம் செல்வராகவன், ஹீரோ எஸ்.ஜே.சூர்யா என மூன்று இயக்குநர்களின் கலக்கல் காம்போ “நெஞ்சம் மறப்பதில்லை”. டீஸர் வெளியாகி செம ஹிட். யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் அக்டோபர் இரண்டாம் வாரம் ரிலீஸ் செய்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நவம்பர் 11ல் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். மெர்சல் கேரண்டி!

 நேரம் படத்தின் மூலம் தமிழில் அறியப்பட்டவர்...பிரேமம் படத்தின் மூலம் அழகிய காதலை மனதிற்குள் பட்டாம்பூச்சியாய் சுற்றவைத்தவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். ஆகஸ்ட் 22, 2015ல் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கும் அலீனாவிற்கு திருமணம் நடந்தது.இப்போது  அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளது இந்த ஜோடி. “ஞான் அச்சனாய், எண்ட பார்யா அம்ம யாய்... மகன்னானு” என்று முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். என்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்லமுடியவில்லை, நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  வெல்கம் குட்டி அல்ஃபோன்ஸ்! 

-பி.எஸ்- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!