கார்த்திக்காக விட்டுக்கொடுக்கிறாரா விஷால்?

 

சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதில் சமீபகாலமாக விஷாலின் சக்ஸஸ் ரேட் 100%.

பாண்டிய நாடு தொடங்கி அவரது பெரும்பாலான படங்களை அவரே தயாரித்து வருகிறார். படம் பூஜை போட்ட உடனே ரிலீஸ் தேதியையும் சொல்லி, அதை மிகச்சரியாக ஃபாலோவும் செய்கிறார். இதனால், சினிமா வியாபாரத்தில் உருவாகும் பல சிக்கல்களை விநியோகஸ்தர்கள் தவிர்க்க முடிந்தது. லாபமும் சாத்தியமானது.

அந்த வரிசையில் 2016 தீபாவளிக்கு கத்திச்சண்டை ரிலீஸ் ஆகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், விஷால் தனது ட்வீட் ஒன்றில் கத்திச்சண்டை தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என அறிவித்திருக்கிறார். தீபாவளி அன்று இசையும், நவம்பரில் படமும் ரிலீஸ் ஆகும் என்றிருக்கிறார் விஷால்.

 

தீபாவளிக்கு தனுஷின் கொடியும், கார்த்தியின் காஷ்மோராவும் இன்னும் சில படங்களும் வெளியாவது உறுதி ஆகியிருக்கிறது. இந்த நிலையில், நடிகர் சங்கத்தேர்தலில் தனக்கு பக்கப் பலமாக இருந்த நடிகர் கார்த்திக்காகத்தான் விஷால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

நல்ல முடிவுதான் பாஸ்!

-கே

 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!