யுவன் ஷங்கரைப் பார்க்கப் பயந்த இயக்குநர்! #Yaakkai | Director vishnuvardhan frightened to see Yuvan

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (13/10/2016)

கடைசி தொடர்பு:14:55 (13/10/2016)

யுவன் ஷங்கரைப் பார்க்கப் பயந்த இயக்குநர்! #Yaakkai

 

 

கிருஷ்ணா, சுவாதி, பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் படம் 'யாக்கை'. குழந்தை வேலப்பன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி, தனுஷ் பாடிய 'சொல்லித் தொலையேன்மா' பாடலும், நா.முத்துகுமார் வரிகளில் வெளியான 'நீ' பாடலும் ஏற்கனவே வெளியே ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

யாக்கை படத்தின் டிரெய்லரைக் காண 

 

விழாவில், நாயகன் கிருஷ்ணாவின் அண்ணனும், இயக்குநருமான விஷ்ணுவர்தன் பேசினார். அதில் "இந்த விழாவுக்கு கிருஷ்ணா என்னை அழைக்கும்போது கண்டிப்பாக வரேன்னு சொன்னேன். ஆனால் அதுக்கப்புறம் தான் யுவன்சங்கர் ராஜா ஞாபகத்துக்கு வந்தார். அவரை எப்படிப் பார்ப்பது என்று பயந்தேன். ரொம்ப நாளுக்கு முன்னாடி யுவனோட பேனர்ல என்னை ஒரு படம் பண்ணச் சொல்லி என்னிடம் கதை கேட்டார். நானும் சொல்றேன்னு சொன்னேன். ஆனால் இன்னைக்கு வரைக்கும் நான் அவரிடம் கதை சொல்லவேயில்லை. விழாவில் யுவனைப் பார்க்கும்போது என்ன சொல்றதுன்னு தெரியாமல் யோசித்தேன். ஆனால் சீக்கிரம் வந்து கதை சொல்கிறேன் யுவன்" என்று மேடையில் யுவன் ஷங்கர் ராஜாவிடம் சொல்லி கலகலப்பூட்டினார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

படத்தின் பாடல்களைக் கேட்க 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close