யூட்யூபில் வெளியான ரெமோ, தேவி - சிக்கலில் தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் திருட்டு டிவிடி பிரச்னையை மிஞ்சி வருகிறது ஆன்லைன் தளங்களின் பிரச்னை. வெள்ளிக்கிழமை படம் வெளியானால் அன்று மதியமே ஆன்லைனில் முழுப்படமும் வெளி வந்து விடுகிறது. சமீபத்தில் கபாலி பட ரிலீஸின் முன்பு தமிழ்ராக்கர்ஸ் உட்பட பல இணையதளங்களை நீதிமன்றம் முடக்க சொல்லி ஆணையிட்டது. ஆனால், ஒரு தளத்தை முடக்கினால் புதிதாக இன்னொன்றை உருவாக்கி படங்களை வெளியிட்டு கொக்கரித்தன ஆன்லைன் தளங்கள். 

youtube போன்ற தளங்களில் வெளியானால் டெக்னாலஜி மூலம் அவற்றை நீக்குவதோ, அல்லது காப்பிரைட் சட்டங்கள் மூலம் நஷ்ட ஈடு கேட்பதோ சாத்தியம். ஆனால், சொந்த டொமைனில் இருந்தால் , அவர்களை ஒன்றுமே செய்ய முடிவதில்லை. யூட்யூப் பயனர்கள் தான் அதிகம் என்பதால் அதில் மட்டுமாவது வெளியாகாமல் இருக்கிறதே என தயாரிப்பாளர்கள் நினைப்பதுண்டு.

ஆனால், ரெமோ படத்தை யூட்யூபிலும் வெளியிட்டு விட்டார்கள். தமிழண்டா என்ற யூட்யூப் சேனலில் ரெமோ மற்றும் தேவி படங்கள் முழுமையாக ரிலீஸ் செய்யப்பட்டிருக்கின்றன. விரைவில் இவை நீக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். ஆனால், இதிலும் மாறி மாறி புதுப்புது சேனல்களில் வெளியிட்டால் என்ன செய்வது? 

திரையுலகம் இதற்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும்.

-கார்க்கிபவா

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!