சிம்புவின் நாயகி... அடுத்து விஜய்சேதுபதியுடன் டூயட் பாடுவார்!

தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என்று அடுத்தடுத்து படங்கள் தற்பொழுது விஜய்சேதுபதிக்கு  ரிலீஸாகியிருக்கிறன.  அடுக்கடுக்காக படங்களை ரிலீஸ் செய்வது மட்டுமின்றி, அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகிவருகிறார் விஜய்சேதுபதி.

தற்பொழுது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடித்துவரும் படத்துக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. அரசியல் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் படம் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர் ரேணிகுண்டா பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் புதுப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்துக்காக முதலில் கீர்த்திசுரேஷிடம் தான் கேட்கப்பட்டதாம். ஆனால் விஜய்யுடன் பைரவா, அதைத்தொடர்ந்து சூர்யாவுடன் “ தானா சேர்ந்த கூட்டம்” என்று பிஸியாக இருப்பதால் தேதிகள் ஒதுக்கித்தரமுடியவில்லையாம். அதனால் மஞ்சிமாமோகனை படக்குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. கதை ரெடி, படப்பிடிப்பிற்கான இடத்தை தேர்வு செய்துவருகிறது படக்குழு. 

கே.வி.ஆனந்த் படத்தை முடித்த கையோடு, பன்னீர் செல்வம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்துகொள்ளவிருக்கிறார். கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கும் “அச்சம் என்பது மடமையடா” ஷூட்டிங் முடிந்து வெளியாக தயாராக இருக்கிறது. 

-பி.எஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!