வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (17/10/2016)

கடைசி தொடர்பு:16:00 (18/10/2016)

வொயிட் & வொயிட்டில் ரஜினி! 2.0 ஷூட்டிங் ஸ்பாட் படம்!

 

2.0

ஜினிகாந்த் எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் படப்பிடிப்பு நடந்த பொழுது ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்த படம் வெளிவந்தது. தற்போது 2.0 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்  புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.  

 

சினிமா ரசிகர்களுக்கு பெரிய விஷுவல் டிரீட் கொடுத்து  கல்லா கட்டிய பாகுபலி திரைப்படம் தேசிய விருதும் பெற்றது. இதைத் தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகத்தை இயக்குநர் ராஜமவுலி இயக்கி வருகிறார். இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டில் வெளிவரும் என  சொல்லப்பட்டது. தற்போது சோனி தொலைக்காட்சி நிறுவனம் பாகுபலி இரண்டாம் பாகத்தின் ஹிந்தி சேட்டிலைட் உரிமையை ரூ 51 கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

 

ஒரு பக்க கதை 

'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமான பாலாஜி தரணீதரனின் இரண்டாவது படம் ’ஒரு பக்க கதை’. இந்த படத்தின் ப்ரிவ்யூ  சமீபத்தில் திரையிடப்பட்டது. கபாலி இயக்குநர் ரஞ்சித்தும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பாலாஜி தரணிதரனையும் படத்தையும் வாழ்த்தி உள்ளார்கள்.  


- க.பாலாஜி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்