ரெக்கார்ட் பிரேக் விற்பனை... தெறியை மிஞ்சும் பைரவா?! | Bairavaa pre-release business: Success of Vijay's Theri making distributors quote high prices

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (18/10/2016)

கடைசி தொடர்பு:15:54 (18/10/2016)

ரெக்கார்ட் பிரேக் விற்பனை... தெறியை மிஞ்சும் பைரவா?!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பைரவா படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை “ஸ்ரீ க்ரீன் புரொடக்‌ஷன்” நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.ஒவ்வொரு ஏரியாவும் முன்பில்லாத பெரும் தொகைக்கு  விற்பனையாகும் என்று சொல்லப்படுகிறது. 

தியேட்டர் வெளியீட்டு உரிமைக்காக, பல்வேறு பகுதியிலிருந்து விநியோகஸ்தர்கள் அணுகிவருகிறார்கள். இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆற்காடு பகுதிகளுக்கான திரையரங்குகளுக்கு மட்டும் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டுள்ளன. வட ஆற்காடு பகுதிகளில் 3.5 கோடிக்கும், தென் ஆற்காடு பகுதிகளுக்கு 3.7 கோடிக்கும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளுக்கு 3.5 கோடிக்கும் பைரவா விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தெறி படத்துக்கு நடந்த விற்பனையை மிஞ்சி விட்டது பைரவா. 

இன்னும் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை மற்றும் திருச்சி பகுதிகளுக்கான விற்பனை இந்த வருட இறுதிக்குள் ஸ்ரீ க்ரீன் புரொடக்‌ஷன் நிறுவனத்தால், விற்பனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. படம் ரிலீஸ் செய்வதற்கு முன்னரே குறைந்தது 50 கோடிக்கு வியாபாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். 

 

 

விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார். படத்துக்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், பாடல் காட்சிகள் படப்பிடிப்புக்காக ஸ்விட்சர்லாந்து சென்றிருக்கிறது படக்குழு.  ஏழு நாட்கள் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் ரொமான்டிக் பாடல் ஒன்று படமாக்கப்படவிருக்கிறது. விஜயா புரொடக்‌ஷன் தயாரித்துவரும் இப்படத்தில், விஜய்க்கு முதன்முறையாக இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்க,  பிரவீன் கே.எல் கத்திரியிடுகிறார். 

- பி.எஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்