என்ன என்ன படங்கள்... என்ன என்ன ஆடியோ... இந்த வார தமிழ் சினிமா! #Weekendmovies | Movies releasing on twenty first october

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (19/10/2016)

கடைசி தொடர்பு:18:13 (19/10/2016)

என்ன என்ன படங்கள்... என்ன என்ன ஆடியோ... இந்த வார தமிழ் சினிமா! #Weekendmovies

கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் தமிழில் எந்த பெரிய படங்களின் வெளியீடும் இல்லை. ஆனால், மற்ற மொழி படங்கள் ரிலீஸ் நிறையவே இருக்கிறது. அது என்னென்ன படங்கள்? என்னென்ன கதை? பார்க்கலாம்...

தெலுங்கு 

இசம் (ISM)

புரி ஜெகன்னாத் இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம் நடித்திருக்கும் படம். படத்தில் கல்யாண் ராம் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டாக நடித்திருக்கிறார். 'இந்தப் படம் கண்டிப்பாக நமது இருவரது சினிமா கெரியரிலேயே சிறந்ததாக இருக்கும்' என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ஹீரோ கல்யாண் ராம். அதிதி ஆர்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார். 

 

இந்தி 

31 அக்டோபர்:

இந்திரா காந்தி கொலையான நாளில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம் பற்றிய படம் தான் 31 அக்டோபர். தக், ஹலால் போன்ற மராத்தி படங்களை இயக்கிய ஷிவாஜி லோட்டன் பட்லி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சோஹா அலி கான் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சாட் உச்சக்கே:

கப்பி, பாபே, ஜக்கி, பாப்பி, சோனா, அஜ்ஜி, ஹக்கு இந்த ஏழு முட்டாள்களின் காமெடி கதை தான் சாட் உச்சக்கே. மனோஜ் பாஜ்பய், அனுபம் கெர், கே கே மேனன், அதிதி சர்மா நடித்திருக்கும் இப்படத்தை சஞ்சீவ் சர்மா இயக்கியிருக்கிறார். சென்ற வாரமே பாலிவுட்டில் வெளியான இப்படம் இந்த வாரம் தான் நம்ம ஊரில் வெளியாகிறது.

 

ஹாலிவுட்

ஜேக் ரேச்சர்: நெவர் கோ பேக் 

2012ல் வெளியான ஜேக் ரேச்சர் படத்தின் சீக்குவலாக வெளியாகவிருக்கும் படம் ஜேக் ரேச்சர்: நெவர் கோ பேக். முதல் பாகத்தை இயக்கிய க்ரிஸ்டோஃபர் மெக்வாரிக்கு பதில் இந்த பாகத்தை இயக்கியிருப்பது எட்வர்ட் ஸ்விக். முதல் பாகத்திலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தான் கதை துவங்குகிறது. தன்னுடன் ராணுவத்தில் வேலை செய்த சூசன் டர்னரை சந்திக்கிறார் ஜேக் ரேச்சர். அதே நேரத்தில் டர்னர் ஒரு குற்றவாளி என்கிற தகவலும் ஜேக்கிடம் வருகிறது. அதன் பின் நடக்கும் திருப்பங்களும், அதிரடிகளும் தான் படம். டாம் க்ரூஸின் தெறி ஆக்‌ஷனைக் காணவே ரசிகர்கள் வெயிட்டிங். படம் ஐமாக்ஸிலும் திரையாகவிருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

 

ட்ரைன் டூ பூசன்:

ஜூலை மாதமே கொரியாவில் வெளியான படத்தின் ஆங்கில வெர்ஷன். ஸோம்பி த்ரில்லர் விரும்பிகளுக்கான கொரியன் தயாரிப்பு தான் ட்ரைன் டூ பூசன். அதிவேக ரயில் ஒன்றில் ஸோம்பியால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் ஏறுகிறார். அவர் மூலமாக ரயிலில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுகிறது. அதன் பின் மற்றவர்களின் நிலை என்ன ஆகிறது என்பது தான் கதை.  

 

வுல்வ்ஸ் அட் தி டோர்:

நான்கு நண்பர்கள் ஒரு வீட்டில் கூடுகின்றனர். அன்று இரவு ஃபேர்வெல் பார்டியில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள் தான் படம். பட்டர்ஃப்ளை எஃபக்ட் 2, அனெபெல் போன்ற படங்களின் இயக்குநர் ஜான்.ஆர்.லியோநெட்டி இயக்கியிருக்கும் மிக சிறிய படம் இது. மொத்தப் படமே 77 நிமிடங்கள் தான். 

 

தமிழ்

காகிதக் கப்பல்:

சினிமாவைப் பற்றிய இன்னொரு சினிமா காகிதக் கப்பல். ஹீரோ அப்புக்குட்டி, நாயகி திலிஜா இவர்களை வைத்து படம் இயக்கும் எம்.எஸ்.பாஸ்கர் இவர்களைச் சுற்றி நகர்கிறது படத்தின் கதை. எஸ்.சிவராமன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

என் மக்களே அடுத்த வாரம் கொடி, காஷ்மோரானு தீபாவளி ரிலீஸ் வெயிட்டிங்ல இருக்கதால வேற எந்தப் பெரிய படங்களும் வெளியாகல. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து இசையமைத்திருக்கும் 'மீசைய முறுக்கு' படத்தின் மச்சி எங்களுக்கு பாடலும், ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்திருக்கும் 'புரூஸ் லீ' படத்தின் பாடல்களும் வெளியாகின்றன அதைக் கேட்டுக் கொண்டே காத்திருப்போம். 

- பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close