மலர் டீச்சர் தங்கையும் நடிக்க வந்தாச்சு!


பிரேமம் படத்தில் நடித்த சாய்பல்லவியின் நடிப்பையும் மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் எளிமையையும் இன்று வரை சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மூர் நெட்டீசன்கள். மலர் டீச்சர் கிரியேட் பண்ணின மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த  வந்துவிட்டார் அவரது தங்கை பூஜா. தற்போது பூஜா, காரா என்கிற குறும்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் வெளிவரயிருக்கும் காரா படத்தைப்  பற்றி சில தகவல்கள் இதோ...

பிரேமம் படம் ஹிட்டானதை தொடர்ந்து சாய்பல்லவியின் கால்ஷீட்டிற்காக போட்டி போட்டுக் கொண்டிருந்த படாதிபதிகளில் சிலர் கோயம்புத்தூரில் படித்து  வந்த அவரது தங்கை பூஜாவை நடிக்கவைக்க முயற்சி செய்தனர். ஆனால்  அவர்களுக்கெல்லாம் டேக்கா கொடுத்து வந்த பூஜா, கோயம்புத்தூர் இளைஞர்  அஜித் சொன்ன கதை பிடித்துப்போக ஷூட்டிங்கிற்கு ரெடி என்றாராம்.

செப்டம்பர் மாதம் முதல் நாள் தொடங்கப்பட்ட இந்தப்படம் நவம்பர் மாத  இறுதியில் ரிலீஸாக இருக்கிறது. படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில்  வெளியாகவுள்ளது.

சமீபத்தில் காரா படத்தின் போஸ்டரை வெளியிட்ட சாய்பல்லவி, போஸ்டரைப் பார்க்கும் போது இது ஷார்ட் ஃபிலிம் போல் இல்லை. பெரிய படத்தின் சாயல்  தெரிகிறது என்று படக்குழுவிடம் சொல்லியிருக்கிறார்.

காரா படத்தின் ஷூட்டிங்கை கோயம்புத்தூரை சுற்றியும், ரைடு ஃபார் லவ்  என்கிற தீம்மை மையமாக வைத்தும் எடுத்திருக்கிறார்கள். சுருக்கமாக, காதலுக்காக ஒரு பயணம் தான் காரா எனலாம்.

இந்தப் படம் முழுக்க, பூஜாவும் வயதான ஒருவரும் தான் பயணிக்கிறார்களாம்.  வயதானவராக சின்னத்திரை தொகுப்பாளர் கதிர் நடித்திருக்கிறார். பூஜாவிற்கு  செம போல்டான கேரக்டராம்.

இது பூஜாவிற்கு முதல் படமாக இருந்தாலும் நடிப்பில் பின்னியெடுத்திருக்கார்.  சின்ன முகப்பாவனைகளும் அவரது அக்கா போன்றே அழகாக செய்திருக்கிறார். இவர் மட்டும் பெரியதிரைக்கு வந்து விட்டால் சாய்பல்லவிக்கு  கடும் போட்டி தான் என்கிறார்கள் படக்குழுவினர்.

காரா படக்குழு இதற்கு முன்பு மூன்று படங்கள் எடுத்திருக்கிறது. இந்தக்குழுவில்  புதியதாக இணைத்திருக்கார் பூஜா. முந்தைய மூன்று படங்களில் இருந்து காரா  படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அதிகம்  உழைத்திருக்கிறார்களாம். இந்தப்படம் அரை மணி நேரத்தில் இருந்து முக்கால்  மணி நேரம் வரை ஓடக்கூடியதாக இருக்கும்.

காரா என்கிற பெயர் காதல் தேவதையை குறிக்கும் என்பதால் காதல் சார்ந்த இந்தப் படத்திற்கு காரா என்று பெயர் வைத்துள்ளனர்.

குட்டி மலர் டீச்சரை பார்க்க ஆவலாக இருக்கோம் ப்ரோ..!

- மா.பாண்டியராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!