ஜொலிக்கும் பொண்ணு தெறிக்கும் ஜின்னு! #சன்னிலியோனுக்காக பாடும் ரம்யா நம்பீசன்

“ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு தெறி தெறிக்கப் பார்த்தா ஜின்னு” இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் சன்னிலியோன். இந்தப் பாடலை சன்னிலியோனுக்காகப் பாடியவர் ரம்யா நம்பீசன். இந்தியில் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் ஹிட்டடித்த “ராகினி எம். எம்.எஸ் 2” படம் நினைவிருக்கிறதா? அப்படம் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாக தயாராகிவருகிறது. 

இந்தியின் பிரபல தயாரிப்பு நிறுவனமான “ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ்” நிறுவனம் இந்தியில் பெற்ற வசூலை, தமிழ் தெலுங்கிலும் அறுவடை செய்ய திட்டமிட்டு,  அப்படத்தை தமிழில் டப் செய்வதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது. கவர்ச்சியுடன் அதே சமயம் மிரட்டும் பேயாக  சன்னிலியோன் இப்படத்தில் நடித்திருக்கிறார். பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

இப்படத்திற்கு “ராத்ரி” என்று பெயரிட்டுள்ளனர். விஷால், லட்சுமிமேனன் நடித்த பாண்டிய நாடு படத்தில் வந்த “கலாச்சி ஃபை” பாடலுக்குப் பிறகு ரம்யா நம்பீசன் இப்படத்தில்  பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஸ்பெஷலே பேபிடால் பாடல் தான். இதுவரை 8 கோடி மக்கள் கண்டுகளித்து ரசித்த, சன்னிலியோன் இனி தமிழில்.

படத்தின் கதை..... ஷூட்டிங்கிற்காக பங்களாவிற்கு செல்பவர்களுக்கு, அந்த பங்களாவில் நடக்கும் அசம்பாவிதமும், ராகினி என்ற பேயின் அட்டகாசமும் தான் கதை. ஷகிலா வாழ்க்கை படமானால், நடிக்க இருக்கும் நடிகைகள் லிஸ்டில் இவரும் இருந்தார்.  தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டவர் சன்னிலியோன், டப்பிங் படங்களின் வழியாக தமிழில் தடம் பதிக்கிறார்.

வெல்கம்! 

-பி.எஸ்- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!