நடிகர் நாகேஷ் பற்றிய இந்த 5 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

நாகேஷ்... தன் வசீகரமான உடல் மொழியாலும், நளினமான குரல் வளத்தாலும் சுமார்  40  ஆண்டுகாலம், தமிழ் சமூகத்தின்   வாழ்க்கையை கொண்டாட்டமாக்கிய மகா கலைஞன்.  நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர பாத்திரங்களிலும் தனக்கென தனி அடையாளம் பதித்தவர் நாகேஷ். திருவிளையாடல் தருமி, காதலிக்க நேரமில்லை செல்லப்பா,  தில்லனா மோகனாம்பாள் வைத்தி என அவர் ஏற்ற பாத்திரங்கள் தனித்துவமானவை. 

தனது வாழ்வின் அனுபவத்தில் இருந்து நகைச்சுவையை அகழ்ந்தெடுத்து,  மக்களின் சோகத்தையும் சோர்வையும் துடைத்தெடுத்த இந்த அற்புதக் கலைஞனை இந்தியாவின் ஜெர்ரி லூயி என்று போற்றுகிறார்கள்.  எம்.ஜி.ஆர். சிவாஜி தொடங்கி, கமல், ரஜினி கடந்து, இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை  நடித்துள்ள நாகேஷின் சிறப்பே அவர் நகலெடுக்க முடியாத கலைஞன் என்பது தான். 

ஒரு நாடகக் கலைஞனாக வாழ்க்கையைத்  தொடங்கி, காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் திரைக்கலைஞனாக உருவெடுத்த நாகேஷ் பற்றி நாம் அறிந்திராத ஐந்து தகவல்கள்! 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!