கெளதமி பிரிவு குறித்து... - கமல்ஹாசனின் மறுப்பு அறிக்கை | Kamal Denied that he never released any letter regarding Gautami

வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (02/11/2016)

கடைசி தொடர்பு:17:09 (02/11/2016)

கெளதமி பிரிவு குறித்து... - கமல்ஹாசனின் மறுப்பு அறிக்கை

கமல்

தமிழ் திரையுலகின் லிவிங் டுகெதர் இணையாக கமல்ஹாசன் - கௌதமி இருவரும் வாழ்ந்து வந்தனர். கௌதமி தனது மகள் சுப்புலட்சுமி, கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஆகியோரை கவனித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில், கமலிடமிருந்து தான் பிரிந்துவிட்டதாக கௌதமி நேற்று அவரது வலைதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அதில் கடந்த இரண்டு வருடங்களாக குழப்பமான மனநிலையில் இருந்து, மிகுந்த வேதனையுடன் இந்த முடிவு எடுத்திருப்பதாகக் கூறியிருந்தார். இந்த முடிவு எடுப்பது மிகுந்த சிரமமாக இருந்தது என்றும், தனது மகளுக்கு சிறந்த தாயாக இருப்பதே தலையாய கடமையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.

மேலும், நமது நிருபருக்கு நேற்று அவர் அளித்த பேட்டியிலும் என் மகள் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டியது, ஒரு தாயாக என் கடமை என்று தெரிவித்திருந்தார்.

கௌதமியின் இந்த பதிவிற்குப் பிறகு, கமல் வெளியிட்டதாக ஒரு சின்ன அறிக்கை வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. ‘கௌதமி மறக்க முடியாத ஒரு மரபுக்கவிதை’ என்று ஆரம்பிக்கும் அந்த அறிக்கையில் அவர் சொன்னதாக சில விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன.

வழக்கமாக சமூக வலைதளங்களின் போக்கு குறித்து அறிந்த பலரும் அது கமலிடமிருந்து வந்தது என்று உறுதியாகத் தெரியாத நிலையில், அதை புறந்தள்ளி வந்தனர். ஆனாலும், சிலர் அவரே எழுதியாக இருக்கலாம் என்று நினைத்து பகிர்ந்து வருகின்றனர்.

இந்தக் குழப்பத்திற்கு சற்று முன் முற்றுப்புள்ளி வைத்தார் கமல். ட்விட்டரில் அந்த அறிக்கை தன்னால் வெளியிடப்பட்டதல்ல என்று மறுத்த அவர் ‘இது அநாகரீகச் செயல்’ என்று சாடியதோடு, இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

கமல்

இதனால், அந்தக் குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.  

-சத்ரியன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close