கொடி, காஷ்மோராவுக்கு கிடைத்த ஜாக்பாட்! #WeekEndMovies

சென்ற வாரம் கொடி, காஷ்மோரா, ஏ தில் கை முஷ்கில் படங்களால் கலர்ஃபுல் ஆனது தீபாவளி. இந்த வாரம் அதற்கு அப்படியே எதிராக தமிழில் எந்த படமும் வெளியாகவில்லை. ஆனாலும் மலையாளம், ஆங்கிலம் என என்டர்டெயினன்மென்டுக்கு பங்கமில்லை.  என்னென்ன படங்கள்? என்னென்ன கதை? இதோ...

மலையாளம்:

ஆனந்தம்:

இன்ஜினியரிங் படிக்கும் நண்பர்களின் இன்டஸ்ட்ரியல் விசிட்  பயணமே கதை. காதல், நட்பு, கனவுகள், சண்டைகள் என அவர்களின் அந்த நான்கு நாள் ட்ரிப்பில் நடைபெறும் சம்பவங்களாக விரியும் படம். இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் உதவி இயக்குநர் கணேஷ் ராஜ் இயக்கியிருக்கிறார். நேரம், ப்ரேமம் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். கேரளாவில் அக்டோபர் 21ம் தேதியே வெளியாகிவிட்ட படம் இப்போது தான் நம்ம ஊரில் வெளியாகிறது.

 

ஆங்கிலம்:

டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்:

காமிக்கிஸில் இருந்து சினிவான இன்னொரு சூப்பர் ஹீரோ படம் தான் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ். முன்னாள் நரம்பியல் மருத்துவருக்கு கிடைக்கும் அதிசய சக்திகளும், அவர் சந்திக்கும் எதிரிகளும் என பக்கா சூப்பர் ஹீரோ பேக்கேஜ். சினிஸ்டர் படம் இயக்கிய ஸ்காட் ட்ரிக்சன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். லீட் ரோலான ஸ்டீஃபன் ஸ்ட்ரேன்ஜ் கதாப்பாத்திரத்தில் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்திருக்கிறார். படம் ஐமேக்ஸிலும் வெளியாகிறது. 

 

ட்ரோல்ஸ்: 

தங்களின் இருப்பிடத்தில் மிக மகிழ்ச்சியாக, ஆடி பாடி கொண்டாடுகிறது ட்ரோல்ஸ். அவர்களின் லீடராக இருக்கிறது பாப்பி. ட்ரோல்ஸ் குழுவுக்கு அப்படியே எதிரான மகிழ்ச்சியே இல்லாத கூட்டம் பெர்கைன். அவர்களுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி ட்ரோல்ஸ்களை சாப்பிடுவது மட்டும். பெர்கைனின் திடீர் தாக்குதலை பாப்பியும், ப்ரான்சும் எப்படி சமாளித்து வெல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஸ்கை ஹை, அல்வின் அண்டு த சிப்மங்க்ஸ் படங்களை இயக்கிய மைக் மிச்சேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

 

மிஸ்டர்.சர்ச்:

கார்லோட் ப்ரூக்ஸ் மற்றும் அவரது தாய் மேரி ப்ரூக்ஸ் இருவரும் ஒரு அப்பார்மெண்டில் வசித்து வருகிறார்கள். அங்கு சமையல் செய்வதற்காக வருபவர் சர்ச். இந்த மூன்று பேர்களுக்குள் நிகழும் சம்பவங்களே படத்தின் கதை. சென்ற மாதமே அமெரிக்காவில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பெற்றது படம். படத்தை ப்ரூஸ் ப்ரிஸ்ஃபோர்ட் இயக்கியிருக்கிறார்.

 

அவதார்:

இன்றும் நாளையும் ஐமாக்ஸ் தொழிநுட்பத்தில் ஜாஸ் சினிமாவில் திரையாகவிருக்கிறது ஜேம்ஸ் கேமரூனின் அவதார். 

தமிழ் படம் எதுவும் வெளியாகவில்லை என்ற கவலை வேண்டாம் உறவுகளே... அடுத்த வாரம் பல நாட்களாக தள்ளிப்போன 'அச்சம் என்பது மடமையடா' வெளியாக இருக்கிறது. 

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!