இஞ்சி இடுப்பழகியும், 400 கோடி ரகசியமும்! #HappyBirthdayAnushkaShetty

அனுஷ்கா

ஸ்வீட்டியின் குழந்தை முதல் இன்று வரையிலான ஃபோட்டோ ஆல்பத்தை காண க்ளிக் செய்க

அனுஷ்கா!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். தவறியும் விடக்கூடாத பெயர். அம்மன் வேடத்தில் இருந்து அம்மா வேடம் வரை எதை ஏற்றாலும், அதை நம்ப வைக்கும் தோற்றமும், நடிப்பும் அனுஷ்கா ஸ்பெஷல்.

சினிமாவுக்காக உடல் எடை ஏற்றிய நடிகர்களை தெரியும். நடிகையை தெரியுமா? இஞ்சி இடுப்பழகி படத்துக்காக 17 கிலோ எடை ஏற்றினார் அனுஷ்கா. ஏன் என்ற கேள்விக்கு, அவர் சொன்ன பதில்தான் டாப். “ஃபிகர்தான் ஒரு பெண்ணுக்கு அழகு என நம்புகிறார்கள் இந்தக் காலத்து பெண்கள். ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியமே தவிர, ஸ்ட்ரக்சர் இல்லை என சொல்ல விரும்பினேன்” . அதுதான் அனுஷ்கா. கமர்ஷியல் விஷயங்களை எல்லாம் தாண்டி ஒரு நடிகை சில மாத இடைவெளியில் எடை ஏற்றி இறக்குவதெல்லாம் ரிஸ்க். ஆனால், ஸ்வீட்டிக்கு அந்த பயமும் இல்லை.

“She knows how to carry herself" என்பார்கள். அனுஷ்காவுக்கு எந்த இடத்தில், எந்த உடையில் எப்படி இருக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். 

படப்பிடிப்பில் அனுஷ்காவை பார்த்தவர்கள் வாய்பிளப்பது அவர் அழகை பார்த்து இல்லை என்பதுதான் நிஜம். காலை 9 மணிக்கு மேக்கப் முடிந்து கேரவானை விட்டு இறங்கினால், மீண்டும் மதிய உணவு வரை ஸ்பாட்டில் தான் இருப்பார். அவருக்கு, ஷாட் இருக்கிறதோ இல்லையோ. ஸ்பாட்டில் தான் இருப்பார்.

அதிகம் கிசுகிசுக்களில் சிக்காத நடிகை அனுஷ்கா. கோபிசந்துடன் கெமிஸ்ட்ரி பத்திக்க, நிஜத்திலும் நல்ல ஜோடி என்றார்கள். இருவரும் மறுத்ததும் மங்கியது அந்தச் செய்தி. அதன் பின் பெரிதாக எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை அனுஷ்கா.

பாகுபலி, அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி உட்பட பல பெண்களை மையமாக கொண்ட பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா. ஏறத்தாழ 400 கோடி ரூபாய் இந்தப் படங்கள் மூலம் வசூல் ஆனது. அந்த வகையில் ’பணக்கார’ நடிகை என்றால் அது அனுஷ்காதான்.

ஸ்வீட்டியின் குழந்தை முதல் இன்று வரையிலான ஃபோட்டோ ஆல்பத்தை காண க்ளிக் செய்க

அனுஷ்கா ஒரு செம பைக் டிரைவர். ஆரம்பக்கால தெலுங்கு படங்களில் அதை அதிகம் காட்சிப்படுத்தினார்கள். இப்போது பைக்குக்கு ஓய்வு தந்துவிட்டார் அனுஷ்கா.

 
ஸ்வீட்டியின் குழந்தை முதல் இன்று வரையிலான ஃபோட்டோ ஆல்பத்தை பார்த்ததில் ஒன்று புரிந்தது. அனுஷ்காவின் அழகுக்கு வயதே கிடையாது. ஏனெனில் ஸ்வீட்டியின் அழகு அகம் சார்ந்தது. லவ் யூ ஸ்வீட்டி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!