முதன்முறையாக யு படத்தில் ஜி.வி.பிரகாஷ் - பெருமையில் ராஜேஷ்!

பிரகாஷ்

மதுவோ, இரட்டை வசனங்களோ நிச்சயம் இந்தப் படத்தில் இருக்காது என்ற டாக்லைனுடன் தொடங்கப்பட்ட ராஜேஷின் படம் தான் “கடவுள் இருக்கான் குமாரு”. நவம்பர் 10ல் ரிலீஸ். ஜி.வி.பிரகாஷ், நிக்கிகல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி என்று காமெடிக்கென தனி ப்ளாட் போட்டு ஊடுகட்டரெடியாகிவிட்டது கிக் (KIK). “ஆல் இன் ஆல் அழகுராஜா”, “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” இவ்விரு படங்களுமே சரிவர போகாதநிலையில், நிச்சயம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராஜேஷ். அதற்காக புரமோஷன்களிலும் சிக்ஸர் அடித்துவருகிறார். இப்படம் குறித்த சில சுவாரஸ்யங்களையும் பகிர்ந்துகொண்டார். 

கடவுள் இருக்கான் குமாரு டைட்டிலைச் சொன்னதே ஜி.வி.பிரகாஷ் தான். இந்த டைட்டிலைச் சுருக்கிப் படித்தால், கிக்னு வரும். கிக் நமக்கு செட்டாகுற வார்த்தை தானே. டைட்டிலுக்காகவே கேரக்டர் பெயரையும் குமாருனு மாற்றினேன். நடனம், காமெடி, ஸ்டைல்னு இந்த தலைமுறைக்கான நடிகராகமாறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். என் படத்துக்கும் இவர் தான் சரியாக இருப்பார்னு இவரை நடிக்கவைத்தேன். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜோட நடிப்பும் ஸ்பெஷல். தயாரிப்பாளர் சிவா, எந்த வகையிலும் என்னை தொந்தரவு செய்யவில்லை. நானே போய் சொல்லுறவரைக்கும் எதையுமே என்னிடம் கேட்டுக்கொள்ளமாட்டார். மொத்தத்துல இந்தப் படம், ஜி.விக்கு வெளியாகவிருக்கும் முதல் யு சான்றிதழ் படம். அதை நான் இயக்கியிருக்கேன் என்பதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. 

சென்சாருக்கு படம் போகும்போது, சில வார்த்தைகளை மட்டும் தான் நீக்க சொன்னாங்க, விஸூவலில் பெரிய நீக்கம் எதுவுமே இல்லை. இரண்டு ஹீரோயினுக்கும் தனித்தனி காஸ்ட்யூம் டிசைனர்ஸ், என்பதால் படப்பிடிப்பிலும் எந்தப் பிரச்னையும் வரவில்லை. 

ஜி.வி.பிரகாஷ்

படத்தோட கதையென்னன்னா... பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார் ஜி.வி. அப்போ அவர் சொல்லும் வசனம் தான் கடவுள் இருக்கான் குமாரு. அந்த பிரச்னையிலிருந்து தப்பிக்கிறது தான் கதை. ஃபுல்லா காமெடி அதகளம் தான். கூடவே காதல், சண்டைன்னு குடும்பங்களோட பார்க்க பக்கா பேமிலி பேக்கேஜ் தான் இந்த கிக். 

இவரைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷிடம் இரண்டு நாயகிகள் பற்றியும் சொல்லுங்க ப்ரோ என்று கேட்டபோது, “நிக்கி கல்ராணி செம ரவுடி. எப்போதுமே ஜாலி தான். ஆனா ஆனந்தி ரொம்ப சீரியஸான பொண்ணு. ரொம்ப  சாந்தமாதான் இருப்பாங்க. முக்கியமா இந்தப் படத்தில் ரெண்டு பேருமே செமையா நடிச்சிருக்காங்க” என்று ஜாலியாக முடித்தார் ஜி.வி.பிரகாஷ். 

-பி.எஸ்- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!