அட... சிம்புவிற்குப் பிறகு, கெளதம் படத்தில் இவரா! | Gautham in talks with Vikram for his Next Movie

வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (09/11/2016)

கடைசி தொடர்பு:18:36 (09/11/2016)

அட... சிம்புவிற்குப் பிறகு, கெளதம் படத்தில் இவரா!

கெளதம்

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் இயக்கியிருக்கும் படம் “அச்சம் என்பது மடமையடா”. இப்படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்து படமும் வெளியாக தயாராகிவிட்டது. சென்சாருக்கு சென்ற இப்படம், யு சான்றிதழுடன் வரும் நவம்பர் 11 ரிலீஸ் என திட்டமிட்டார்கள். ஆனால், அதிலும் கடைசி நேர சிக்கல் வரலாம் என்கிறது கோடம்பாக்கம். 

இந்நிலையில் இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கெளதம் மேனன், மஞ்சிமா மோகன் மற்றும் படத்தின் தொழில்நுட்பக்குழுவினர்கள் கலந்துகொண்டர். ஆனால் சிம்பு கலந்துகொள்ளவில்லை.

இந்த விழாவில், அடுத்த படம் பற்றியான ரகசியத்தையும் உடைத்தார் கெளதம். சிம்புவைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து படம் இயக்கவிருக்கிறார் கெளதம். அதற்கான முதல்கட்ட பேச்சிவார்த்தையில் இருப்பதாகவும் தெரிவித்தார். முதன்முறையாக கெளதம், விக்ரம் கூட்டணி இணையும் படத்திற்கு எப்படியும் இசை ஏ.ஆர்.ரஹ்மான் தான்.  

திரு இயக்கத்தில் “கருடா” படப்பிடிப்பிற்கு விக்ரம் வருவார் என்று  காத்திருக்கும் நிலையில், ஹரி இயக்கத்தில் சாமி இரண்டாம் பாகத்திற்கான படப்பிற்கு தயாராகிவந்தார் விக்ரம். இதற்கு நடுவே, கெளதம் மேனன் படத்திற்கான படப்பிடிப்பை விக்ரம் முடித்துவிட்டு, அடுத்த வருடம் சாமி படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. 

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், " ஏன் எப்போதும் , உங்கள் படங்களுக்கு பிரச்னை வருகிறது " என கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கான பதிலை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்க! 

-பி.எஸ்.முத்து-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்