" எங்க அப்பாவ வெச்சு எல்லாம் படம் பண்ண மாட்டீங்களா? " ரஜினி பேரனின் செல்ல மிரட்டல்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விகடன் இணையதளத்தில்  ''அட... சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ்!" என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தோம். அது இப்போது உண்மையாக நிருபணம் ஆகிவிட்டது. முதலில் கலைப்புலி தாணு தான் சொன்னது போலவே சௌந்தரியா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

 

போயஸ் கார்டனில் ரஜினியை சந்திக்க போனார் தாணு. அப்போது தாணுவை வாசலிலேயே அன்பாக மறித்த தனுஷ் மகன் யாத்ரா "நீங்க எங்க தாத்தா நடிக்கிற படத்தை மட்டும்தான் தயாரிப்பீங்களா? எங்க அப்பா நடிக்கிற படத்தை தயாரிக்க மாட்டீங்களா?' என்று செல்லமான கோபத்துடன் கேட்க அவன் முதுகை அன்பாக தட்டிக் கொடுத்துவிட்டு ரஜினியை பார்க்க அவர் அறைக்கு சென்றார் தாணு. ரஜினியை சந்தித்து மனம் விட்டு பேசிக்கொண்டு இருக்கும்போது வாசலில் யாத்ரா சொன்ன செய்தியை ரஜினியிடம் தாணு சொல்ல குபீரென சிரித்துவிட்டார் ரஜினி. 'தாணு இப்பவெல்லாம் யாத்ரா ரொம்ப பேசி என்னையே கலாட்டா பண்றான்" என்று சொல்லிவிட்டு ரஜினி தனது வழக்கமான சிரிப்பை உதிர்த்தார்.

 

சௌந்தர்யா சொன்ன கதை கலைப்புலி தாணுவுக்கு பிடித்துவிட்டது. அதை அப்படியே தனுஷிடம் சொல்ல சொல்லி இருக்கிறார். சௌந்தரியா சொன்ன கதையை கேட்ட தனுஷ் அதில் ஒரு சில மாற்றங்களை திருத்தி கொடுக்க இப்போது இந்த படத்தின் கதை வசனம் இரண்டும் தனுஷ் எழுதுகிறார். திரைக்கதை இயக்கம் இரண்டு வேலைகளையும் சௌந்தரியா பார்த்துக்கொள்கிறார். 'வேலையில்லா பட்டாதாரி' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 20ந் தேதி துவங்குகிறது. ஏற்கனவே 'வேலையில்லா பட்டதாரி' முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலாபால், சுரபி இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக இடம் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

 

-சத்யாபதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!