Published:Updated:

'தனுஷ் மாதிரிதான் சிம்புவும்...அனுஷ்காதான் என் ஒரே ஃப்ரெண்ட்!' - கெளதம் மேனன் #VikatanExclusive

ம.கா.செந்தில்குமார்
'தனுஷ் மாதிரிதான் சிம்புவும்...அனுஷ்காதான் என் ஒரே ஃப்ரெண்ட்!' - கெளதம் மேனன் #VikatanExclusive
'தனுஷ் மாதிரிதான் சிம்புவும்...அனுஷ்காதான் என் ஒரே ஃப்ரெண்ட்!' - கெளதம் மேனன் #VikatanExclusive
'தனுஷ் மாதிரிதான் சிம்புவும்...அனுஷ்காதான் என் ஒரே ஃப்ரெண்ட்!' - கெளதம் மேனன் #VikatanExclusive

‘‘ ‘பிரதர் அப்படிப் போங்க, இப்படி பண்ணுங்க’ன்னா உடனே பண்ணுவாங்க. ரெண்டுபேரையும் குஷிப்படுத்தணும்ங்கிற லெவல்ல இதை நான் சொல்லலை. தனுஷ்ட்டயே சொல்லியிருக்கேன். ‘உங்களைமாதிரிதான் சிம்புவும். ஒண்ணு சொன்னா, நாம எதிர்பார்க்காததைவிட அப்படி ஒண்ணு பண்ணுவார்’னு சொல்லியிருக்கேன். ‘அச்சம் என்பது மடமையடா’ ட்ரெயிலரைப் பார்த்துட்டு, ‘சிம்பு நல்லா பண்ணியிருக்கார் ப்ரோ. ட்ரெயிலர் நல்லா இருக்கு’னு முதல்ல மெசேஜ் பண்ணினதே தனுஷ்தான்.’’ 

‘‘சிம்பு-தனுஷ் இரண்டுபேர்கூடவும் படம் பண்ணியிருக்கீங்க. எப்படி இருக்கு அந்த அனுபவம்?’’ என்ற கேள்விக்குத்தான் இப்படி பதில் சொல்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ‘அச்சம் என்பது மடமையடா’ ரிலீஸ் மகிழ்ச்சி, தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும்’ தோட்டா’ அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் பரபரப்பில் இருக்கிறார் கௌதம்.

‘‘என்னை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷ் ஸ்பெஷல் என்ன?’’
‘‘ ஃபைட்டுக்கு மட்டும் ரிகர்சல், அதுவும் ஒருமுறைதான். ஃபுல் லெங்க்த் ஷாட் அப்படியே பண்ணுவார். அவர் பாடி ஃப்ளெக்சிபுளா அவர் நினைக்கிறமாதிரிலாம் மூவ் ஆகி செமையா பண்றார். படமே தனுஷ் ஸ்பெஷல்தான்.’’

‘‘உங்கப் படங்கள்ல ஹீரோயினுக்கு செம ஸ்கோப் இருக்கும். இதுல மேகா ஆகாஷ். என்ன ஸ்பெஷல்?’’
‘‘நான் முன்பே ‘அவங்களுக்கு நடிக்கிற ஆர்வம் இருக்கானு விசாரிங்க’னு என் டீம்கிட்ட கேட்டிருக்கேன். பிறகு அவங்க வேறொரு படத்தில் அறிமுகமாகி அந்தப் படம் ஷூட்டிங் போயிட்டு இருந்த சமயத்தில் ஒன்றிரண்டு முறை காஃபி ஷாப்ல பார்த்திருக்கேன். அப்ப, ‘இந்தப் பொண்ணு ரொம்ப நல்லா இருக்காங்க. தொடர்ந்து நடிக்க ஆர்வம் இருக்கானு கேளுங்க’னு சொல்லுவேன். ‘இல்ல ரொம்ப சின்னப் பொண்ணு மாதிரி இருக்காங்க’னு என் டீம்ல சொன்னாங்க. இதுக்கிடையில் தனுஷ் படத்துக்கு அவங்க பொருத்தமா இருப்பாங்கனு தோணுச்சு. கொஞ்சம் ட்ரெயின் பண்ண வேண்டி இருக்கு. மத்தபடி நாம என்ன கேக்குறோமே அதைச் சரியா கொடுத்துடுறாங்க. அந்த ராவான பெர்ஃபார்மன்ஸுக்காகத்தான் இதுல மேகா இருக்காங்க.’’

‘‘ஜோமோன் டீஜான்னு மலையாள கேமராமேனை கொண்டு வந்திருக்கீங்களே?’’
‘‘அவரின் ஒளிப்பதிவை ஃபாலோ பண்ணிட்டே வந்தேன். ‘தட்டத்தின் மறயத்து’ல ஒரு ‘விடிவி’ ஃபீல். அது எனக்கு பிடிக்கும். ‘நீங்க ஜோமோனை மீட் பண்ணணும்’னு என் டீம்ல இருந்து சொல்லிட்டே இருந்தாங்க. வரச்சொல்லி சந்திச்சேன். சிலரைப் பார்த்ததும் ‘இவங்கள்ட்ட பேசலாம், பழகலாம்’னு தோணும். அப்படி ஜோமோனைப் பார்த்ததும் ‘இவர்தான் நம்ம கேமராமேன்’னு தோணுச்சு. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான விஷுவல்ஸ் கொடுத்திருக்கார்.’’

'தனுஷ் மாதிரிதான் சிம்புவும்...அனுஷ்காதான் என் ஒரே ஃப்ரெண்ட்!' - கெளதம் மேனன் #VikatanExclusive

‘‘இசை, ஒளிப்பதிவு, இயக்கம்னு சமீபத்தில் உங்களுக்கு பிடிச்ச வொர்க்?’’
‘‘‘மெட்ராஸ்’ல வர்ற ‘நான் நீ’’இன்ட்ரஸ்டிங்கான காம்போசிஷன். வேறமாதிரி லிரிக். அதுல இருந்தே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்ன பண்றார்னு பார்த்துட்டே இருப்பேன். அவர் பாடல்களை கேட்டுட்டே இருக்கேன். ஆனாலும் எனக்குத் தெரிஞ்சு இன்னும் அப்டேட்டாகி இன்னைக்கு இருக்கிற யங்ஸ்டர்ஸோட மூட்ல இருக்கிறது ரஹ்மான்சார்தான். 25 வருடங்களா இருந்தாலும் அவர் ட்ரை பண்றது நமக்கு ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ்தான். ஃபர்ஸ்ட் அனுப்பிச்ச வெர்சன்ல இருந்து ஃபைனல் வெர்சன் வேறமாதிரி இருக்கும். ‘இல்லல்ல அது அப்ப அனுப்பினது. இப்ப இன்னும் கொஞ்சம் ஆடியன்ஸ் மாறிட்டாங்க. வேறமாதிரி ஒண்ணு பண்ணுவோம்’னு அப்டேட்டா இருக்கார். அதுதான் வியக்கவைக்கிற விஷயம். கேமரா வொர்க்னா ‘மொய்தீன்’, ‘சார்லி’ பண்ணின ஜோமோன் வொர்க் பிடிக்குது. அந்தமாதிரி சமீபத்துல தமிழ்ப் படங்கள்ல அப்படி எதுவும் என்னை இம்ப்ரஸ் பண்ணலை. அதேபோல ‘தேனி ஈஸ்வரின் வொர்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘தங்க மீன்கள் பண்ணினவர். இப்ப தரமணி பண்ணினார். ‘அச்சம் என்பது...’லக்கூட ‘சோக்காலி’ சாங் பண்ணித்தந்தார். அவரோடயும் வொர்க் பண்ணணும்னு பார்த்துட்டே இருக்கேன்.’’ 

‘‘வேறென்ன புது முயற்சிகள் போயிட்டு இருக்கு?’’
‘‘வெப் சீரிஸ். இப்ப கம்ப்ளீட்டா ஆன்லைன் விஷயங்கள்லதான் ஃபோகஸ் இருக்கு. சிம்பு, தனுஷ் படங்கள் முடிச்சப்பிறகு கண்டிப்பா ஒரு கேப் கிடைக்கும். அதுல ஒரு வெப் சீரிஸ் புரடியூஸ் பண்ணி டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் போயிட்டு இருக்கு. யூடியூப்க்கு 20 நிமிடங்களா 10 எபிசோடுகள்ல வரும். உங்களுக்கு ஒரு படம் பாக்குறமாதிரியேதான் இருக்கும். அதே சினிமா குவாலிட்டியோட ஹீரோஸை வெச்சு பண்ணலாம்னு இருக்கேன். இதுக்கு கண்டிப்பா பெரிய ஹீரோக்கள் வரமாட்டாங்க. ரெடியா இருக்கிற ஹீரோவை வெச்சு பண்ணுவோம். என்னைமாதிரியே இதுல தனுஷுக்கு இன்ட்ரஸ் இருக்கு. ‘அந்தமாதிரி எனக்கு ஒண்ணு பண்ணுங்க ப்ரோ, நானே புரடியூஸ் பண்றேன்’னு சொல்லியிருக்கார். அதை இரண்டு பேரும் சேர்ந்துக்கூட பண்ண வாய்ப்பு இருக்கு.’’

‘‘ஹீரோயின்ஸ்ல அனுஷ்கா உங்க நட்பு வட்டத்துல இருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்க?’’
‘உண்மையைச் சொல்லணும்னா இன்டஸ்ட்ரியில இப்ப இருக்கிற ஒரே ஒரு ஃப்ரெண்ட்னு அவங்களைச் சொல்லலாம். எனக்கு மட்டுமில்லை, என் டீம்ல உள்ள எல்லாருக்குமே அவங்க ஃப்ரெண்ட். தொடர்ந்து டச்ல இருந்துட்டு, எங்கள்ல யாருக்காவது ஒரு முதுகுவலியா இருந்தால்கூட உடனே போன்பண்ணி, ‘நீ அந்த டாக்டரைப்போய் மீட் பண்ணு. அந்த பிசியோதெரபிஸ்ட்டை பார். ஆயூர்வேதிக் கிளினிக் ஒண்ணு அங்க இருக்கு. போ’னு சொல்லி அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் பண்ணித் தர்றனு அந்த லெவலுக்கு இருக்கிற ஒரே ஒரு ஃப்ரெண்ட் அவங்கதான். கைண்ட் ஹார்ட்டடு சோல். எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்குமே அப்படித்தான். எங்க நல்ல ஃப்ரெண்ட். வெல்விஷர், அட்வைஸர்.’’

‘‘நாகார்ஜுனா, அமலானு பேசுறவங்க எல்லாம் உங்களைப் பற்றி உயர்வா பேசுறாங்க. அந்த நட்புல அப்படி என்ன மேஜிக்?’’
‘‘நல்ல ஆளுங்கக்கூட வொர்க் பண்ணணும்னு ஆசை. அவ்வளவுதான். ‘உதயம்’ பார்த்த சமயத்தில் இருந்தே அவர்கூட வொர்க் பண்ணணும்னு ஆசை. கேட்டுட்டே இருப்பேன். இப்பக்கூட ஆடியோ லான்ச்ல, ‘கௌதம் நீங்க கேட்டுட்டே இருக்கீங்க. ஆனா பண்ண மாட்டேங்குறீங்க. நெகடிவ் ரோல்கூட கேட்டீங்க. நான் பண்றேன்னு சொன்னேன். காணாப் போயிட்டீங்களே’ன்னார். அந்தமாதிரி யார் கேட்பா? அப்படி கேட்குறமாதிரி இருக்குறோம்னா கண்டிப்பா ஆசைப்பட்டு பண்ணுவேன். அதேபோல வெங்கடேஷ் சார்கூட வொர்க் பண்ணினேன். என்ன சொன்னாலும் செய்வார். இன்ட்ரஸ்ட்டிங்கா பண்ணுவார். விரும்பி வொர்க் பண்ணுவார். அதேபோல புனித் ராஜ்குமார், அவ்வளவு கைண்டா பேசுவார். ‘ஐயோ இவங்கக்கூடல்லாம் எப்ப படம் பண்ணப்போறோம்’ங்கிற ஆர்வத்துலதான் அவருக்கு கதை சொன்னேன். ‘நல்லா இருக்கு’ன்னார். ‘இல்ல சார் நீங்க வழக்கமா கொஞ்சம் கமர்ஷியலா பண்ணுவீங்க’ன்னேன். ‘ஐயோ அதெல்லாம் வேண்டாம். ஐ வான்ட் டு பீ அன் கௌதம்மேனன் ஃபிலிம்’னு சொன்னார். ரசிச்சேன். இப்படி தேடிப்போய் வொர்க் பண்ணணும்னு ஆசை. அதேபோல மலையாளத்துல ஃபஹத் பாசில், பிருத்விராஜ்கூட அவ்வளவு நேரம் செலவிட்டிருக்கேன். இவங்க ரெண்டுபேரோட வொர்க் பண்ணணும்னு ரொம்ப ஆசை. எல்லா லாங்குவேஜ்லயும் நம்ம இடத்தைப் பிடிக்கணும்ங்கிற எண்ணம் கிடையாது. அவங்கப் படங்களைப் பார்த்திருக்கோம், ரசிச்சிருக்கோம். அவங்களை பிடிக்கும். அவங்கக்கூட வொர்க் பண்ணணும்னு அவ்வளவுதான். அதுக்கு மொழி ஒரு பிரச்னையா எனக்குத் தெரியலை.’’

‘‘ஆனால் உங்களின் இந்திப் பட முயற்சிகள் செட் ஆகலையே?’’
‘‘ஆமாம், இந்தி மட்டும்தான் பிரச்னை. அங்க ஸ்டுடியோ, பெரிய ஆர்ட்டிஸ்ட் வேணும். ரெண்டு முறை பண்ணி மாட்டிக்கிட்டேன். யாருமே தியேட்டருக்கு வரலை. புது முகங்கள் இல்லாம ஸ்டார்களை வெச்சு பண்ணியிருந்தா தியேட்டருக்கு வந்திருப்பாங்கனு தோணுச்சு. ‘காக்க காக்க’வை அங்க பண்றதுக்கு முதல்ல என்னைத்தான் கேட்டாங்க. அட்வான்ஸும் கொடுத்தாங்க. ஆனால் அதை திருப்பி கொடுத்துட்டேன். பிறகு அதை ரிஷிகாந்த் காமத் டைரக்ட் பண்ணி, ‘ஃபோர்ஸ்’ங்கிற பேர்ல வந்து பெரிய ஹிட். ‘மிஸ் பண்ணிட்டோம். அதைப் பண்ணியிருக்கலாம்’னு தோணிட்டே இருக்கு. இங்க, ‘ஏற்கெனவே எடுத்ததைத்தானே எடுத்திருக்கார்’னு ‘என்னை அறிந்தால்’-ஐ சொன்னாலும் இந்திக்கு அது நல்ல ஃப்ரெஷ்ஷான சப்ஜெக்ட். அடுத்தமுறை அங்கப் போகும்போது பெரிய ஹீரோஸோட வொர்க் பண்ணணும்.’’

'தனுஷ் மாதிரிதான் சிம்புவும்...அனுஷ்காதான் என் ஒரே ஃப்ரெண்ட்!' - கெளதம் மேனன் #VikatanExclusive

‘‘என்ன படிக்கிறீங்க? என்னமாதிரியான வாசிப்பு?’’
‘‘அது பெருந்தேடல். தேடிட்டே இருப்பேன். இன்னும் ‘கிண்டல்’க்குள்ள நான் போகலை. ஆனால் ஆன்லைன்போய் நிறைய தேடுவேன். எனக்கு இன்னும் த்ரில்லர்ஸ், க்ரைம் ஸ்டோரிஸ் பிடிக்குது. அப்பப்ப ஃபிக்ஷன் இல்லாத விஷயம் எடுத்து படிப்பேன். சமீபத்தில் வந்த ஓபாமாவோட புத்தகம், ஸ்டீவ் ஜாப்ஸ் புக், ஜில்லியன் ஃபிலின் எழுதின ‘கான் கேர்ள்’னு ஒரு புத்தகம் வந்துச்சு. அதை படமாக்கூட எடுத்தாங்க. அவங்க சீரிஸ் சமீபத்துல நிறைய படிச்சேன். காலீத் ஹுசைனி மூணு புத்தகங்கள்தான் ரிலீஸ் பண்ணியிருக்கார். அது எல்லாத்தையும் பல முறை படிச்சிருக்கேன். ‘காட் ஃபாதர்’ புத்தகத்தை இப்பவும் ஒரு வாரத்துக்கு ஒருமுறை ஒரு சாப்டர் படிச்சிடுவேன், ஏதோ ஒரு தாட் ஓப்பன் ஆகும். ஆனால் தமிழ்ல யாராவது கொடுத்தா வாசிப்பது உண்டு. அப்படி சமீபத்தில வாசிச்சது, ‘லிங்கூ2’. ‘பொன்னியின் செல்வன்’ கொஞ்சம் கொஞ்சமா அப்பப்ப படிச்சிட்டு இருக்கேன்.’’

‘‘ஏன் சாட்டிலைட், தியேட்டரிக்கல், ஆடியோனு பல வழிகள்ல இருந்தும் வருவாய் வருது. படம் நல்லா இருந்தா லாபகரமானதாகத்தானே இருக்கும்?’’
‘‘நீங்க சொல்ற இந்த உரிமைகளை எல்லாம் பாதிப்படம் ஷூட்டிங் போயிட்டு இருக்கும்போதே விக்க ஆரம்பிச்சிடுறோம். அப்படி வர்ற பணத்துலதான் மீதிப் பாதி ஷூட்டிங்கே போகுது. அதனால நம்மளுடைய வேல்யூவை நாமளே குறைச்சிக்கிறோம். ‘இன்னைக்கு ஷூட்டிங்குக்கு பணம் வேணும். என்ன பண்ணலாம்? சாட்டிலைட் கொடுத்துடலாம்’னு நினைச்சுப் போனா... நம்ம அவசரத்தைப் பயன்படுத்திகிட்டு, 10 கோடி ரூபாய் படத்தை ஆறு கோடிக்கு கேட்பாங்க. ‘பணம் வந்தா போதும்’னு நம் வேல்யூவை நாமளே கட் பண்றோம். அதேபோலத்தான் மியூசிக்லயும். இங்க ரெண்டு மூணு ஆடியோ லேபிள்ஸ்தான் இருக்கு. அவங்களோட மோனோபோலிதான். அவங்க சொல்றதுதான் விலை. அவங்களே ஒரு வேல்யூ பிஃக்ஸ் பண்ணி நம்மகிட்ட கொடுப்பாங்க. அவங்க மூலமா ரஹ்மான் சார் ஆடியோவுக்கு அந்த மரியாதை இல்லாம இருந்துச்சு. ‘கடைசி நிமிஷம் வரைக்கும்வெயிட் பண்ணுவோம். எப்படியும் அவங்களுக்கும் பணம் வேணும். வருவாங்க’னு தெரிஞ்சுகிட்டு அண்டர்கட் பண்ணி பேசினாங்க. எதுக்கு நான் தரணும்? நானே ரிலீஸ் பண்ணிட்டேன். இதனுடைய லாபம் இப்ப தெரியாது, அஞ்சாறு வருஷம் கழிச்சு லாபகரமா இருக்கலாம்.’’ 

‘‘இத்தனை வருஷமா தாமரைக்கூட டிராவல் பண்றீங்க. தோழியா, பாடலாசிரிசையையா அவங்கள்ட்ட என்னென்ன மாற்றங்களை உணர்ந்திருக்கீங்க? ‘அச்சம் என்பது மடமையடா’வில் மதன் கார்க்கியும் இருந்தாரே?’’
‘‘எந்த மாற்றமும் இல்லை. அன்னைக்கு எப்படி பார்த்தேனோ அதே தாமரைதான். இன்னும் தயிர் சாதம்தான் சாப்பிடுறாங்க. அதே தலைவலி. அதே பழைய போன்தான். இன்னும், ‘எனக்கு கேசட்ல ரெகார்ட் பண்ணிக்கொடுங்களேன்’ம்பாங்க. ஆனால் அவங்களைவிட சவுண்டான ஆள் கிடையாது. தமிழ், இங்கிலீஷ்னு எல்லா புத்தகங்களும் படிப்பாங்க. இங்கிலீஷ் சாங் கேட்பாங்க. இங்கிலீஷ் படங்கள் பார்த்துடுவாங்க. அவங்க பாடல்கள் கவிதை மட்டும் இல்லாம அதில் ஓர் உரைநடையும் கதையும் இருக்கும். கார்க்கிட்ட போனதுக்கு காரணம், தாமரை அந்த டைம்ல ஒரு பிரச்னையில் இருந்தாங்க. அவங்களை தொடர்புகொள்ள முடியலை. எங்களுக்கு உடனடியா பாடல் வேணும் என்ற நிலை. ஆனால் நான் நினைச்சது ரொம்ப தப்புனு தாமரை உணர்த்தினாங்க. ஏன்னா அந்தப் பிரச்னை உச்சகட்டத்துல இருந்தப்ப அவங்க எழுதினதுதான் ‘தள்ளிப்போகாதே’. ‘பரவாயில்லையா, வரலாம்ல. ஒண்ணும் பிரச்னை இல்லயில’னு கேட்டு வரவெச்சு எழுதினதுதான் ‘ராசாளி’. ஆனால் என்னமோ தெரியலை கார்க்கியை பாடலாசிரியராவும் ஒரு மனிதராவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட உட்கார்ந்து சும்மா பேசிட்டே இருக்கலாம். மத்தவங்க பாடல்களையும் ப்ரமோட் பண்ற ஒரே ஆள் கார்க்கிதான். ‘அந்தப் பாட்டை கேட்டுப்பாருங்க’னு ட்வீட் பண்ணுவார். தவிர கார்க்கிக்கு தந்ததால வருத்தப்படுற அளவுக்கெல்லாம் தாமரை கிடையாது. ‘ஆல் சாங் நான் இல்லையா’னு கேப்பாங்க. தவிர கார்க்கியை அவங்களுக்கும் பிடிக்கும்.’’

- ம.கா.செந்தில்குமார்

ம.கா.செந்தில்குமார்

உலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்!