வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (15/11/2016)

கடைசி தொடர்பு:15:49 (15/11/2016)

'பாட்ஷா' மாணிக், 'வேதாளம்' கணேஷ், 'தெறி' விஜய்குமார்... என்னா ட்ரான்ஸ்பார்மேஷன்!

தமிழ் சினிமாவில் சாங் இல்லாம படம் வருதோ இல்லையோ மாஸ் ட்ரான்ஸ்பர்மேசன் சீன் இல்லாம படம் இருக்காது. அந்த வகையில் ரசிகர்களை சீட்டில் இருந்து எகிற வைத்த சில மரண மாஸ் சீன்களின் லிஸ்ட் இதோ!!

பாட்ஷா:

''நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி''

எத்தனை தடவை பாத்தாலும் முதல் தடவைப் பார்க்கிற மாதிரி. மாணிக்கமாக இருந்தவர் பாட்ஷாவாக மாறி எதிரிகளைத் துவம்சம் செய்யும் இந்த சீனை யாராலும் மறக்கவே முடியாது.

விஸ்வரூபம்:

"யாரென்று புரிகிறதா, இவன் தீ என்று தெரிகிறதா" 

கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேக அடி. சாது போல முதலில் அடி வாங்கி மூக்கில் ரத்தம் ஒழுக ஒரு கட்டம் வந்தவுடன் `எவன் என்று நினைத்தாய் எதைக் கண்டு சிரித்தாய்’ என்று சொல்லி அடிக்கும் மாஸ் சீன்.

வேதாளம்:

''தெறிக்க விடலாமா?'' 

ரொம்ப அடிக்கிறாங்க சார். வலி தாங்க முடியலை சார். தப்பா கூட்டிட்டு வந்துட்டாங்க சார் என்று சொல்லி அழுதுகொண்டே சிரிக்கும் மரண மாஸ் சீன்.

தெறி:

"அவரு பேரு IPS விஜய் குமாராகூட இருக்கலாம்''

ஒரு பக்கம் ஏமி ஜாக்ஸன் இவரை சந்தேகப்பட்டு யாரென்று தெரிந்து கொள்ளலாம்னு இன்டர்நெட்டில் பார்க்க மறு பக்கம் ஜோசப் குருவிலா விஜய் குமாரா மாறும் மிரட்டலான சீன்.

வல்லவன்:

''திரும்பிட்டேன்டி திருந்திடேன்''

இனிமேல் இதுபோல் மறுபடியும் நடக்காது என்று ரீமா சென்னின் காலில் விழுந்து அழுது புலம்பிக்கொண்டிருப்பார் சிம்பு. ஒரு கட்டத்தில் கடுப்பாகி கெத்தா ரீமா சென்னைப் பார்த்து பன்ச் சொல்ற நச் சீன்.

கொடி:

                                                                       "நமக்குள்ள அரசியல் வேற. பெர்சனல் வேற''

த்ரிஷா கொடியைக் கொலை செய்துவிட்டு அந்த இடத்துல அன்பை உட்கார வெச்சு தேர்தல்ல ஜெயிச்சிடலாம்னு நினைக்க கொடியும் நான்தான் அன்பும் நான்தான்னு சொல்லும் டக்கர் சீன்.

-தர்மிக் லீ

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்