ஆவியாய் திரும்பும் ஜெனிலியா... காக்க காக்க பார்ட் 2!

2003ல் 'துஜே மேரி கசம்' என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனவர் ஜெனிலியா. அதே ஆண்டில் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பல முன்னணி ஹீரோக்களுடனும்  தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்தார். 2012-ம் ஆண்டு அவரது காதலரும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குடன் அவருக்கு திருமணம் ஆனது. அதன் பின் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், சல்மான் கான் நடித்த 'ஜெய் ஹோ' இந்தி படத்திலும், தன் கணவர் ரிதேஷ் தேஷ்முக் நடித்த 'லாய் பாரி' மராத்தி படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதன் பின் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயாகி முழுக்க குடும்ப பொறுப்புகளை மட்டும் கவனித்து வந்தவர் இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

ஜெனிலியா

2003ல் கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான 'காக்க காக்க' 2011ல் இந்தியில் 'ஃபோர்ஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா ரோலில் ஜான் ஆப்ரஹாமும், ஜோதிகா ரோலில் ஜெனிலியாவும் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்தில் ஜெனிலியா இறப்பது போல படம் முடிந்திருக்கும். எனவே அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் அவர் ஆவியாக நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. எது எப்படியோ ஜெனிலியாவை வெகுநாள் கழித்து திரையில் பார்ப்பது மட்டும் உறுதி.

'ஃபோர்ஸ் 2' பட டிரெய்லர்:

 

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!