Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“டென்ஷன்... எயிட்ஷன்... ஃபைவ்ஷன்...” - ஆர்.பார்த்திபன் சிரிப்பேச்சு!

பார்த்திபன்

நிகழ்ச்சியின் படங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்குப் பிறகு இயக்குநர் பார்த்திபன் இயக்கியிருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சாந்தனு, பார்வதி நாயர், தம்பிராமையா, சிறப்புத்தோற்றத்தில் சிம்ரன், அருண்விஜய் மற்றும் பார்த்திபன் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (16.11.16) நடந்தது. 'ப_திரி_க, தொ_லக்_ட்சி, ப_பலை, இ_ணய, ஊ_க நண்பர்களுக்கு நன்றி' என்ற சசி&சசியின் பேனர் ஐடியாவிலிருந்தே நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது. இசையமைப்பாளர் சத்யா படத்தின் தீம் மியூசிக்கை மெலோடிக்கா இசைக்கருவியில் வாசித்து முடித்த பின் படக்குழுவினர் பேசியதிலிருந்து...

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ஜனா:

பார்த்திபன் சார் மாதிரி லெஜண்ட் கூட வேலை செய்தது சந்தோஷமா இருக்கு. நான் அவருக்கு நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கேன்.

படத்தொகுப்பாளர் சுதர்ஷன்:

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்குப் பிறகு பார்த்திபன் சார் கூட எனக்கு இது இரண்டாவது படம். படம் நல்லா வந்திருக்கு, வெற்றிபெறும்னு நம்பிக்கை இருக்கு.

இசையமைப்பாளர் சத்யா:

எனக்கும் இது சார் கூட இரண்டாவது படம்.  திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்கு பின்னணி இசையமைச்சேன். அப்போவே அடுத்த படமும் சேர்ந்து வேலை செய்வோம்னு சொன்னார். அதே போல கூப்பிட்டதுக்கு நன்றி சார். இதில் முழுசா வேலை செய்திருக்கேன். மியூசிக் பொறுத்தவரை சாரே நிறைய ஐடியா சொல்வார், அதுக்கப்பறம் நான் அதைப் பார்த்தா இன்னும் பெஸ்ட்டா வந்திருக்கும். நிறைய அஃப்ஸ்ட்ராக்டான விஷயங்கள் ட்ரை பண்ணியிருக்கோம். உங்க எல்லாருக்கும் அது பிடிக்கும்.

சாந்தனு:

எல்லாரும் இந்த மாதிரி ஃபங்ஷன்ல பேசும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்வாங்க. எனக்கு சந்தோஷம் இருக்கு உண்மை தான். அதவிட குழப்பம் அதிகமா இருக்கு. ஏன்னா, பார்த்திபன் சார் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவார். 2 மாசத்தில் 10 முறையாவது மீட் பண்ணியிருப்போம். திடீர்னு கால் பண்ணி நீங்களும் கீர்த்தியும் சேர்ந்து நடிப்பீங்களா?னு கேட்பார். கண்டிப்பா சார் அவங்களுக்கும் ஆர்வம் இருக்குனு சொல்வேன். மறுபடி இந்த ப்ளான் எப்பிடினு புதுசா எதாவது சொல்வார். அப்படி ஒரு முறை மீட் பண்ணும்போது அடுத்த வாரம் நம்ம படம் ஸ்டார்ட் பண்றோம்னு சொல்லிட்டார் நானும் 2 நாள் ரிகர்சல் பண்ணிட்டு 3-வது நாள் ஷூட் போயிட்டேன். வேக வேகமா டப்பிங் முடிஞ்சிடுச்சு. டிசம்பர் ரிலீஸ்னு சொல்றார். எப்பிடி இவ்வளோ வேகமா இவரால இதைப் பண்ண முடிஞ்சதுங்கறது தான் அந்தக் குழப்பத்துக்குக் காரணம்.

 

நிகழ்ச்சியின் படங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்

பார்த்திபன்:

கோடிட்ட இடத்தை நிரப்ப வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். வழக்கமா மற்ற படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, பாராட்டணும், சுவாரஸ்யமா பேசணும் ஏன்னா, அந்த படத்துக்கும் நமக்கும் பெரிய சம்மந்தம் எதுவும் இருக்காது, மற்றவங்க கவனிக்கும்படியா எவ்வளவு சுவாரஸ்யமா அந்த நிகழ்ச்சிய மாற்றலாம்னு தான் தோணும். ஆனா, இங்க வேற ஒரு ஃபீல். எதனால இந்த சினிமானு கேட்டீங்க, எனக்கு சினிமாவ தவிர வேற பொழப்பு தெரியாது. அது 500, 1000 செல்லாம போனாலும் சரி நாளைக்கே 2000 செல்லாம போனாலும் சரி, எனக்குத் தெரிஞ்சது சினிமா மட்டும் தான். திடீர்னு  11-ம் தேதி காலைல 9 மணிக்கு எழுந்து கண்ணத் திறந்தா எல்லாம் ஒரே மங்களா தெரிஞ்சது. முகத்தைக் கழுவிட்டுப் பாக்கறேன் சுத்தமா எதுவுமே தெரியல. அப்பறம் டாக்டர் கிட்ட போனா, அவங்க கேட்கறது, கையெழுத்து வாங்கறதெல்லாம் பார்த்து ஏதோ பெரிய ஆப்ரேஷன் போலனு இன்னும் பயம் வந்திடுச்சு. எல்லாம் செக் பண்ணிட்டு எல்லாம் நார்மலா தான் இருக்கு. உங்களுடைய ப்ரஷர் தான் உங்க பார்வைய அப்படி தற்காலிகமா பாதிச்சிருக்குனு சொன்னாங்க. சாந்தனு நான் வேகமா பண்ணேன்னு சொன்னார்ல, அவ்வளவு வேகமா ஓடினதால வந்த டென்ஷன் தான் இதுக்கு காரணம். டாக்டர் உங்க டென்ஷன உடனடியா ஒரு நைன்ஷென், எயிட்ஷன், ஃபைஷன்னா குறைங்கனு அட்வைஸ் பண்ணாங்க. இந்தப் படத்தை நான் க்ரவுடு ஃபண்ட் மூலமா பண்ணியிருக்கேன். நிறைய தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி பண்ணலாம், அந்த மாதிரி பண்ணலாம்னு வருவாங்க, செக் குடுப்பாங்க. நானும் எதாவது ஒன்னுலயாவது தப்பித்தவறி பணம் வந்துடும்னு பாப்பேன். ஆனா, எல்லாம் பவுன்ஸ் ஆகும். அதனால தான் இந்த க்ரவுடு. அதுவும் க்ரவ்வ்வ்வ்வ்டு இல்ல, க்ரவுடு தான்.  பத்து பேர் முன்வந்தாங்க. இது ஒரு ஆரோக்யமான விஷயம்னு நான் நினைக்கறேன். நான் இப்போ சில படங்கள்ல நடிக்கறேன் நல்ல சம்பளம் வருது. ஆனாலும் படம் இயக்கும் ஆசை மட்டும் போகல. சொகுசா இருக்கப் பிடிக்கல. எப்பவும் ஒரு கடினமான பாதை தான் உங்கள அழகான இடத்தில் கொண்டு சேர்க்கும். எனக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரே வேண்டுகோள் தான். இது இன்னைக்கு நேற்றுப் பிரச்னை இல்ல பல நாளா பேசிட்டிருக்கோம். விழா நாட்கள்ல பெரிய ஹீரோக்கள் படம் ரிலீஸ் ஆகறதுக்கு பதிலா, சின்னப் படங்கள் வெளியாக வழி செய்தா சிறப்பா இருக்கும். ஏன்னா இப்போ அஜித் படத்தை செவ்வாய்கிழமை ரிலீஸ் பண்ணாக் கூட நான் தியேட்டர்ல போய் பார்ப்பேன். ஆனா சின்னப் படங்களுடைய நிலை அப்படி இல்லை. சாரி ஏதோ பேசிட்டு எங்கயோ போயிட்டேன். படம் நல்லா வந்திருக்கு டிசம்பர் முதல் வாரத்தில் பாடல் வெளியீடும், 23-ம் தேதி படமும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கு. நன்றி என விடைபெற்றார்.

நிகழ்ச்சியின் படங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்

- பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்