'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடக்காட்சி வெளியானது! (வீடியோ)

பட ரிலீஸ் தள்ளிப் போவதால் 'சைத்தான்' பட டீம் ரசிகர்களைக் கவர்வதற்காக ஒரு ஐடியா செய்திருக்கிறது. இதற்கு முன்பு ராஜதந்திரம் படத்தின் 2ம் பாகத்துக்கான முதல் ஆறு நிமிடங்களை வெளியிட்டிருந்தார்கள்.

அதே உத்தியை 'சைத்தான்' படத்துக்கும் செய்திருக்கிறார்கள் படக் குழுவினர். 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிடக் காட்சியை யூ-ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு சேர்த்து படத்தில் இடம் பெறும் ஜெயலக்‌ஷ்மி பாடலையும் வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ஐந்து நிமிடக் காட்சியும், ஜெயலக்‌ஷ்மி பாடலும் திரையிடப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. இதன் மூலம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் 'சைத்தான்' படத்துக்கான எதிர்பார்ப்பை தக்க வைக்கலாம் என்ற திட்டத்திலிருக்கிறார்கள். 

 

படம் பற்றி இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியது...

யாரு சைத்தான்? 

நீங்க கேட்ட கேள்வியில் தான் கதையே இருக்கு. விஜய் ஆண்டனி தான் இந்தப் படத்துல சைத்தான், ஆனா பாஸிட்டிவ் ரோல் தான். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கு வரும் பிரச்னை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் சைத்தான் படத்தோட ஒன் லைன். படத்துல திரைக்கதை தான் ரொம்ப வலிமையா இருக்கும்.  இடைவேளி வரை ஒரு பேட்டன்லையும், இடைவேளிக்குப் பிறகு இன்னொரு கலர்லையும் படம் நகரும். அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்.  

சைத்தான் எந்தமாதிரியான ஜானர்? 

வேலாவேலைக்கு சோறு, ஐடி காட்டுனு நம்ம கொத்தடிமையா நடத்தும் கங்காணி தான் ஐடி வேலைகள். அங்கிருந்து தான் ஐடியாவைப் பிடித்தேன். அங்க நடக்குற விஷயங்கள் தான் கதை. இதில் ப்ளாக் மேக்ஜிக்கோ, சைக்கோவோ, சீரியல் கில்லர் படம் மாதிரியோ கிடையாது. ஆனால் திரைக்கதை சைக்கலாஜிக்கள் ஆக்‌ஷன் ட்ராமாவா இருக்கும். கமர்ஷியல் படம் தான், இருந்தாலும் கொஞ்சம் வெரைட்டியா இருக்கும். நான், சலீம் மாதிரி விஜய் ஆண்டனிக்கு பொருந்தும் ஒரு கதாபாத்திரம் தான் சைத்தான். எந்த ஜானருக்குள்ளும் இந்தப் படத்தை அடக்க முடியாது.  

 

தற்போது படத்தின் அடுத்த 4 நிமிடக்காட்சிகளையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!