வெளியிடப்பட்ட நேரம்: 07:03 (19/11/2016)

கடைசி தொடர்பு:07:03 (19/11/2016)

யுவன் தயாரிப்பு ஒன்று...கலெக்டராக இரண்டு...டோராவாக மூன்று! - இது நயன்தாரா ஹாட்ரிக்

நயன்தாரா பிறந்தநாளைத் தொடர்ந்து அவர் அடுத்து நடிக்கும் படங்களின் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தனையும் கதாநாயகியை மையமாக கொண்ட படங்கள் என்பது தான் நயன்தாராவின் கெத்து. என்ன படங்களில் நடிக்கிறார், யார் இயக்குவது என்ற தகவல்கள் கீழே...

 

டோரா:

நயன்தாரா

இயக்குநர் சற்குணம் மற்றும் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சற்குணத்தின் உதவி இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கும் படம் 'டோரா'. 'மாயா' போன்று வித்தியாசமான த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்றுவருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ஒரு காரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.

 

அறம்:

கோபி நயினார் இயக்கும் படம் 'அறம்'. இதில் நயன்தாராவுக்கு கலெக்டர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, லால்குடி இளையராஜா கலை இயக்கம் என பெரிய கூட்டணி இணைந்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என புகார் தெரிவித்தவர் இந்த மீஞ்சூர் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொலையுதிர் காலம்:

'எ வெட்னஸ்டே' படத்தின் தமிழ் ரீமேக்கான 'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கும் அடுத்த படம் 'கொலையுதிர் காலம்'. இந்தப் படத்தை ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்து இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. தமிழ், தெலுங்கில் பைலிங்குவலாக தயாராகிறது கொலையுதிர் காலம். ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து பூஜா ஃபிலிம்ஸும் இப்படத்தை தயாரிக்கிறது. 

 

- பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க