விஜயசாந்தி முதல் அனுஷ்கா வரை... தமிழ் சினிமாவின் போலீஸ் லேடீஸ்!

 

போலீஸ்

தமிழ் சினிமா வரலாற்றுல என்னதான் 'சிங்கம்', 'சிறுத்தை', 'சாமி', 'காக்க காக்க'னு கலர் கலரா ஹீரோஸ் நடிச்ச போலீஸ் படம் இருந்தாலும், நம்ம ஹீரோயின்ஸ் நடிச்சு கலக்கின போலீஸ் படத்துக்குப் பக்கத்துலகூட அதெல்லாம் நிற்க முடியாது. ஹீரோஸ் அடிச்சா வில்லனோட ஆளுங்க எல்லாம் அதிகபட்சம் பத்து அடிதான் பறந்துபோய் விழுவாங்க. ஆனா நம்ம லேடி போலீஸ் அடிச்சா வானத்துல பறந்து மங்கள்யானுக்கே போய் ஹாய் சொல்லிட்டு வருவாங்க. அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான லேடி போலீஸ் கேரக்டர்ஸ் பார்ப்போமா...

விஜயசாந்தி :

 

 

கோலிவுட்ல விஜயகாந்தும், அர்ஜுனும் நடிச்ச போலீஸ் படத்தைவிட அதிக போலீஸ் படம் நடிச்சது விஜயசாந்தியாதான் இருக்கும். விஜயசாந்தி நிறைய படத்துல ஐ.பி.எஸ்-ஸா நடிச்சதாலயே அவங்களை நிறையப் பேர் ஐ.பி.எஸ். ஆபீஸர்னே நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு அவங்க ஓவர் ஹீட் ஆன பால் பாயசம் கணக்கா பாத்திரத்தோடயே ஒன்றிட்டாங்க. உன் ஆளைப் பார்த்தா மத்தவங்கதான் பயப்படுவாங்க, என் ஆளைப் பார்த்தா நானே பயப்படுவேன் அப்படின்னு சொல்வாங்களே... அந்த மாதிரி இவங்களைப் பார்த்தா ரியல் போலீஸே பயப்படுவாங்க. சந்தேகமே இல்லாம லேடி போலீஸ்ல பெஸ்ட் யார்னா இவங்களைச் சொல்லலாம். 

 

கெளதமி :

 

 

சூப்பர் ஸ்டார் ரஜினியும், சின்னத் திலகம் பிரபுவும் ஒண்ணா சேர்ந்து 'மண்வாசனை' பாண்டியன் கையை உடைச்சிட்டு அவரை ஜெயில்ல இருந்து வெளியே எடுக்க பார்ப்பாங்களே... அந்த 'குரு சிஷ்யன்' படத்துலதான் போலீஸா அறிமுகமானாங்க கெளதமி. அந்தக் காலத்துல இப்படி ஒரு அழகான லேடி போலீஸைத் தமிழ் சினிமா முதல் முதலா அப்பதான் பார்த்துச்சு. போலீஸ் டிரெஸ்ல இவங்க வெட்கப்படுற அழகே தனி. அவங்களோட மாஸ் என்ட்ரியை நீங்களே பாருங்க பாஸு.

 

குஷ்பூ :

 

 

 

போலீஸ் படத்தையே ஒரு குடும்பப் படமா எடுத்தா எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட படம்தான் 'மகளிர்க்காக'. குஷ்பு, வடிவேலு, கோவை சரளா,விந்தியானு பெரிய டீமே நடிச்ச ஒரு காமெடி போலீஸ் படம்தான் இது. இந்தப் படம் வர்றதுக்கு முன்னாடி 'சின்னத்தம்பி'ல நடிச்ச குஷ்பு எல்லாம் போலீஸ் ஆபீஸரா நடிப்பாங்கனு சொன்னா யாருமே நம்பி இருக்க மாட்டாங்க. 80-கள்ல குஷ்புவைக் கனவுக்கன்னியா பார்த்த பலருக்குக் கனவு போலீஸ் ஆபீஸரும் அவங்களாதான் இருப்பாங்க.

சினேகா :

 

 

புன்னகை அரசி சினேகா புரட்சி அரசியா மாறுன படம்தான் 'பவானி'. விக்ரம் நடிச்ச 'சாமி' படத்தோட லேடி வெர்சன் படம்தான் இந்த 'பவானி'. படத்தைக் கிட்டத்தட்ட தெலுங்குப் படம் மாதிரியே எடுத்து 'பார்... முழுசா தெலுங்குப் பட ஹீரோவா மாறுன சினேகாவைப் பார்'னு சொல்ற ரேஞ்சுக்கு இறங்கி நடிச்சு இருப்பாங்க. ஆண் போலீஸுக்கு அப்பறம் தீம் மியூஸிக்லாம் போட்டு இன்ட்ரோ கொடுத்தது சினேகாவுக்கு மட்டும்தான்.

த்ரிஷா :

 

 

சினேகாவுக்கு அப்பறம் இந்தக் காலத்து ஹீரோயினும் போலீஸா நடிக்கலாம்னு நிரூபிச்சது த்ரிஷாதான் கமல்கூட 'தூங்காவனம்' படத்துல போலீஸ் டிரெஸ்ல வராமப் படம் முழுக்க கெத்து போலீஸா கலக்கி இருப்பாங்க. கோலிவுட்ல இந்த மாதிரி ஒரு மாடர்ன் போலீஸை இனி பார்க்கவே முடியாதுனுகூட சொல்லலாம். அந்தப் படத்துல இவங்க கமல்கூட போட்ட சண்டை இருக்கே.....ப்ப்ப்பா.

அமலாபால் :

'தலைவா' படத்துல விஜய்யை லவ் பண்ணிக்கிட்டே அண்டர்கவர் ஆபரேஷன்ல கலக்கி இருப்பாங்க அமலாபால். அமலாபாலோட பால் வடியற முகத்துக்கு போலீஸ் கெட்டப் செட் ஆகவே இல்லைனாலும் விஜய்க்கே விபூதி அடிச்ச அந்த கெத்தைப் பாராட்டியே ஆகணும். அதுக்கு அப்புறம் விஜய்யைக் காப்பாற்றி நானும் நல்ல போலீஸ்தான்னு நிரூபிச்சு இருப்பாங்க. உண்மையா அவங்க நல்ல போலீஸ்தான் ப்ரோ.

காஜல் அகர்வால் :

'ஜில்லா' படத்துல போலீஸையே பிடிக்காத விஜய்க்குக்கூட பிடிச்ச ஒரே போலீஸ் காஜல் அகர்வால்தான். காஜல் அகர்வாலோட அந்த இன்ட்ரோ சீனே தெறியா இருக்கும். படம் முழுக்க போலீஸ் டிரெஸ்லேயே வந்து மாஸ் காட்டிருப்பாங்க. அவளோ பெரிய வில்லன் குருப்பை எதிர்த்து போராட விஜய்க்கு உதவுன காஜல் அகர்வாலை எல்லோரும் பாரட்டியே ஆகணும். நடிக்கணும்... இன்னோருமுறை நீங்க போலீஸா நடிக்கணும்.

அனுஷ்கா :

தமிழ் சினிமாவில் மலையாளி போலீஸா நடிச்ச ஒரே லேடி போலீஸ் இவங்கதான். 'சகுனி' படத்துல சின்ன சீன்ல வந்துட்டுப் போனாலும் மாஸா இருக்கும். இப்படி ஒரு பாசமான, அழகான போலீஸ் நமக்கெல்லாம் கிடைச்சது வரம் பாஸ். அனுஷ்காவுக்கு கொடுக்கிற அந்த இன்ட்ரோ இருக்கே.....சான்ஸ்சே இல்லை. 

 

- லோ.சியாம் சுந்தர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!