Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இந்த தமிழ் படங்களை உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்

திரைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும்? ஒரு தொடக்கம், படத்தின் இடையில் ஒரு பிரச்னை, இறுதியில் அப்பிரச்னையின் முடிவு. இதுதான் நாம் பார்க்கும் பெரும்பாலான படங்களின் அமைப்பு முறை. சில இயக்குனர்கள் அவற்றில் இருந்து வேறுபட்டு படம் எடுப்பார்கள். அவ்வகையில், சில படங்கள் மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவும் அமையும்.  எந்த புள்ளியில் கதை ஆரம்பித்ததோ அதே புள்ளியில் படத்தின் முடிவும் இருக்கும். அப்படிபட்ட சில தமிழ் படங்களின் தொகுப்பு இங்கே:

‘24’ 

சூர்யாவின் மூன்று கேரக்டர்களில் கலக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் கதையம்சமும் கிட்டத்தட்ட இந்த ரகம்தான். கடைசியில் அந்த 24 சிம்பல் போட்ட வாட்ச்சை சூர்யா வேண்டாம்னு தூக்கிபோட்டுட்டு குடும்பத்தோட வாழப்போறேன்னு போவாரே!!!! அப்போ இவ்ளோ நேரம் படம் நடக்கவே இல்லையா, வேஸ்ட்டான்னு ஒவ்வொரு ஜென்ரல் ஆடியன்ஸ்சும் யோசிச்சோமே!!!! அதே தான்பா!!!! ஆரம்பித்த இடத்துலயே படம் முடியும்னு இதத்தான் சொன்னோம்!!!!

‘அவர்கள்’ 

கே.பாலசந்திரின் இயக்கத்தில், சுஜாதாவின் நடிப்பில் வெளிவந்த பழைய தமிழ் படம். படத்தின் தொடக்கத்தில் சுஜாதா கணவனை விட்டு பிரிந்து ரயிலில் பயணம் செய்வார். மும்பைக்கு ஒரு புது வாழ்க்கையை தேடிச்செல்லும் அவர், படம் முடியும் போது, மும்பையில் இருந்து அதே போல ரயில் பயணம் ஒன்றை மேற்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வார்!!!! ஆரம்பித்த இடத்திலேயே, அதிலும் ஆரம்பித்த புள்ளியிலேயே படம் முடியும். 

‘அவள் ஒரு தொடர்கதை’

இதுவும் கே.பாலச்சந்தர் படம் தான். சுஜாதாவின் நடிப்பில் வெளிவந்த இப்படத்தின் தொடக்கத்தில் திருமணப் பேச்சை தட்டிகழித்து விட்டு அலங்காரங்கள் செய்து கொண்டு குடும்பபாரத்தை சுமக்க வேலைக்கு செல்வார். படத்தின் முடிவும் அதுவே…. நடக்கவிருந்த திருமணம் வேண்டாமென முடிவெடுத்துவிட்டு, மீண்டும் குடும்ப சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டு பஸ்ஸில் செல்வார்.

‘மனதில் உறுதி வேண்டும்’

சுஹாசினியின் நடிப்பில் வெளிவந்த இப்படமும், கே.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படம் தான். நர்ஸாக இருக்கும் சுஹாசினி படத்தின் இறுதியில் தனது பணியினை தொடர்வார். இடையில் ஏகப்பட்ட திருப்பங்கள், கணவன் மனமாற்றம் அடுத்த திருமண ஏற்பாடுகள் என என்ன நடந்திருந்தாலும் படம் ஆரம்ப இடத்திலேயே முடிவடையும்.

‘இறைவி’

படத்தின் தொடக்கத்தில் மூன்று பெண்களும் மழையை ரசித்து கொண்டு இருப்பர். தங்கள் வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். படம் முடியும் போதும் கிட்டத்தட்ட அதே நிலை தான். மழை பெய்து கொண்டிருக்கும் போது ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் அதனை ரசித்துக் கொண்டு வாழ்வின் அடுத்த கட்ட நிலையை எதிர்நோக்கி காத்திருப்பர். படம் இடையில் என்னனவோ லீட் எடுத்து எங்கெல்லாமோ சென்றிருந்தாலும், இறுதியில் மழை என்ற ஒற்றை இடத்தில் முடியும். 

‘தெய்வதிருமகள்’

விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்த படம் இது. படம் முடியும் போது, விக்ரம் சாரா பாப்பாவை சித்தியிடம் விட்டுவிட்டு பழைய மாதிரி அவிலாஞ்சிக்கு வந்து சாக்லேட் ஃபேக்ட்ரியில் சாதாரண கிருஷ்னாவாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார். படத்தின் கதையும் மனிதர்களும் ஆரம்பித்த இடத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே இருப்பார்கள்.

‘முத்து’

 சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வந்த ப்ளாக்பஸ்டர் இது. இந்த படமுமா இந்த கேட்டகிரியில் வரும் என்கிறீர்களா? படம் ஆரம்பிக்கும் போது எஜமானுக்கு சேவகராய் வலம்வரும் முத்து ரஜினியின் வாழ்க்கையில் என்னனவோ நடந்து எஜமானிடம் இருந்து விலகி ஃப்ளேஷ்பேக் எல்லாம் முடிந்து……. கடைசியில் முடிவின் போது ‘நான் எப்போதுமே உங்களுக்கு வேலைக்காரன் தான்  எஜமான்’ எனக்கூறி முதல்மாதிரியே குதிரை வண்டியை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டு செல்வார் ரஜினி.

‘பூவே பூச்சூடவா’

 நதியாவின் நடிப்பில் ஃபாசில் அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படம் நிஜமாகவே ஒரு வித்தியாசமான ஜானர் தான். ஒரு அழைப்பு மணியை தொங்கவிட்டபடி பேத்தி வருவாளா, அழைப்புமணியை அடிப்பாளா என பத்மினி அம்மா எதிர்நோக்கி காத்திருப்பார். அதன் பின் படம் அதன் போக்கில் வேறு வேறு இடத்தை அடைந்து எங்கெங்கோ சென்று க்ளைமாக்சில் மீண்டும் அதே இடத்தில் வந்து முடியும்…பாட்டி அழைப்பு மணியை மீண்டும் தொங்க விடுவார்.

'சிந்து பைரவி' 

மறுபடியும் கே.பாலச்சந்தரின் படமே….. படத்தின் தொடக்கத்தில் சுஹாசினி எப்படி தனிப் பெண்ணாக இருக்கின்றாரோ அதே போல தான் முடிவிலும் இருப்பார். கதையின் போக்கிற்கு ஏற்ப இடையில் சிவக்குமார்,சுலக்ஷனா எல்லாம் வருவார்கள்.

'ஆரஞ்சு மிட்டாய்'

ஆம்புலன்ஸ்சில் வேலை செய்யும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. இடையில் விஜய் சேதுபதியால் ஏற்படும் இன்னபிற நிகழ்வுகள் படத்தின் மீதி கதை. படம் முடியும் போது, ரமேஷ் திலக் இடத்தில் அசோக் செல்வன் இருப்பார். ஆம்புலன்ஸ் ஓடியபடி இருக்கும்.

-ஜெ.நிவேதா

மாணவப் பத்திரிகையாளர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்