”அப்ப நடத்தியது அவங்க.. இதுதான் நாங்க. பொதுக்குழு நடந்தே தீரும்!” - நடிகர் சங்கம் கமிஷனரிடம் மனு | General body meeting of South Indian Artistes' Association

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (22/11/2016)

கடைசி தொடர்பு:16:10 (22/11/2016)

”அப்ப நடத்தியது அவங்க.. இதுதான் நாங்க. பொதுக்குழு நடந்தே தீரும்!” - நடிகர் சங்கம் கமிஷனரிடம் மனு

பொதுக்குழு

சிலர் விவரம் தெரியாமல் நடிகர் சங்கம்  மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்று  நடிகர் சங்க பொருளாளர் கார்த்திக் துணை தலைவர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளனர் 

நடிகர் சங்க பொதுக்குழு  வருகிற 27-ம் தேதி லயோலா  கல்லூரியில் நடைபெற  உள்ளது. லயோலா கல்லூரியில் பொதுக்குழுவை நடத்தக் கூடாது என பல்வேறு புகார்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு அளிக்கபட்டு வந்த  நிலையில் இன்று பொதுக்குழுவிற்கு கூடுதல்  பாதுகாப்பு கேட்டு நடிகர் சங்க நிர்வாகிகள்  கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .

 நடிகர் சங்க  பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க  நிர்வாகிகள் உடன் இருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய  பொன்வண்ணன் பொதுக்குழுவிற்கு  பாதுகாப்பு கேட்டு முன்பே  மனு அளித்து இருந்தோம். கமிஷனரும் உரிய  பாதுகாப்பு  அளிப்பதாக உறுதியளித்து இருந்தார்.இடையில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளதால். தற்போது கூடுதல்  பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளோம்

மேலும் கடந்த  முறை நேரில் சந்திக்க  முடியாததால் தற்போது நேரில் சந்தித்து நன்றி  தெரிவித்தோம். பொதுக்குழுவை  நடத்த  கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து  இருப்பது விவரம் தெரியாமல் செய்துள்ளனர்.ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை எப்படி பொதுக்குழுவை கூட்ட  முடியும் என்று கேட்டு  இருக்கின்றனர்.கடந்த  முறை  கூட்டியது முன்னாள் நிர்வாகத்தினர். நாங்கள் பொறுப்பு  ஏற்ற  பிறகு இனி மேல் தான் கூட்ட  உள்ளோம்.

ஏற்கனவே அறிவித்தோம்..அப்போது  உள்ளாட்சி  தேர்தல் மற்றும் தீபாவளி நேரம் என்பதால் தள்ளி  வைத்தோம்.இது உள்ளாட்சி சட்டத்திற்கு உட்பட்டு செய்த  விஷயம்  தான் இது எல்லாம் தெரியாமல் அவர்கள் வழக்கு  தொடர்ந்து உள்ளனர்.திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் நீதிமன்ற  விவகாரங்களை சட்டப்படி  சந்திப்போம்,மற்றபடி நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் இப்போது  இல்லை” என்று  தெரிவித்தார்.

படங்கள் : ஆ.முத்துக்குமார்

- பிரம்மா   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்