இக்கதையில் வரும் சம்பவங்கள் சிலரைக் குறிப்பிடுபவையே! #MoviesBasedonTrueEvents | List of tamil movies based on true events

வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (27/11/2016)

கடைசி தொடர்பு:11:08 (27/11/2016)

இக்கதையில் வரும் சம்பவங்கள் சிலரைக் குறிப்பிடுபவையே! #MoviesBasedonTrueEvents

சினிமா என்பது கற்பனையல்ல. அதையும் தாண்டி உண்மைக் கதைகளை வைத்தும் படம் இயக்கியுள்ளார்கள். அப்படி லிஸ்ட்டில் 'பேஸ்டு ஆன் ட்ரூ ஸ்டோரி, படங்கள்தான் இவை.

விசாரணை : 

இது வெற்றிமாறனால் கொடுக்கப்பட்ட வெற்றிப் படம் என்றே சொல்லலாம். பிப்ரவரி 5, 2016-ல் வெளிவந்த இத்திரைப்படமானது உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தின் கதை செய்யாத ஒரு குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் நான்கு நபர்கள். 1983-ல் குண்டூரைச் சேர்ந்த சந்திரன் அவர்களின் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து செய்யாத ஒரு குற்றத்திற்காக 13 நாட்கள் போலீஸிடம் இரக்கமின்றி அடிவாங்கும் கொடூரமான சம்பவம் அப்போது நடந்தது. இதைப்பற்றி அந்தக் கொடுமையை அனுபவித்த சந்திரக்குமார் அவரே ஒரு புத்தகம் எழுதி 'லாக் அப்' என்று பெயரிட்டு வெளியிட்டார். அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'விசாரணை'.

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் :

இந்தப் படமானது 2012-ல் வெளியானது. ப்ளாக் ஹியூமர் பட வரிசையில் இந்தப் படமும் ஒன்று. இதில் ஹீரோ 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி. படத்தின் கதை பெரிதாக ஒன்றுமில்லை பாஸ். ஹீரோவுக்குக் கல்யாணம் ஆகும் சமயம் ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும்போது எதிர்பாராதவிதமாக மண்டையில் அடிபட்டு பழசையெல்லாம் மறந்து விடுவார். அடுத்த சில நாட்களில் ஹீரோவுக்குக் கல்யாணம். கூட இருக்கும் நண்பர்கள் ஹீரோ வீட்டிற்குத் தெரியாமல் பழசையெல்லாம் நினைவிற்கு கொண்டு வரப் போராடுவதும், அந்த எல்லாம் மறந்த நிலையிலே ஹீரோவின் கல்யாணம் நடப்பதும்தான் படம். இதுவும் உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான். ரியல் ஹீரோ வேறு யாருமல்ல. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான் இது. 'ப்ப்ப்ப்ப்பபா'

 

ரத்த சரித்திரம் :

ஒரு பிரச்னையில் விவேக் ஒபராய், சூர்யாவின் அப்பாவையும் குடும்பத்தையும் கொன்றுவிடுவார். பின் படிப்படியாக அரசியலில் பெரிய இடத்திற்கு சென்று விடுவார் ஒபராய். விஷயத்தைத் தெரிந்த சூர்யா ஒரு பக்கம் தன் குடும்பத்தைக் கொன்றவனைப் பழி வாங்கும் முயற்சியில் இருப்பார். கொல்லும் முயற்சியில் ஒருமுறை தோல்வியடைந்து போலீஸிடம் சரண் அடைவார் சூர்யா. மறு பக்கம் சூர்யாவிற்கு உதவும் போலீஸார் ஒருவர் சூர்யாவின் மனைவி மற்றும் குழந்தைக்குப் பாதுகாப்பு கொடுப்பார். இருவரும் மாறி மாறி ஓபராயைக் கொல்ல முயற்சி கொல்வார்கள். க்ளைமாக்ஸில் அரசியல் மீட்டிங் நடக்கும் இடத்திற்குச் சென்று சூர்யா துப்பாக்கியால் சுடுவார். மும்பையில் பானாரெட்டி, பரிட்டாலா ரவிந்திரா என்ற இருவரின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம். பானா ரெட்டி கேரக்டரில் சூர்யாவும், பரிட்டாலா ரவிந்திரா கேரக்டரில் விவேக் ஒபராயும் நடித்துள்ளார்கள். 

 

சென்னையில் ஒரு நாள் :

சமூக அக்கறைக்கு உரியப் படங்கள் வரிசையில் 'சென்னையில் ஒரு நாள்' படமானது மிகவும் சிறப்பு. நான்கு முக்கியமான கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். பிரகாஷ் ராஜ் மகளுக்கு இருதய மாற்று சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும். அந்தச் சமயத்தில் மற்றொரு இடத்தில் கார்த்திக் என்பவர் விபத்தில் இறந்துவிடுவார். அவரின் இதயத்தை சென்னையிலிருந்து வேலூருக்குக் கொண்டு செல்ல வேண்டும் குறைந்த அவகாசத்தில். யாருமே முன் வராத நிலையில் காவல் துறையில் வண்டி ஓட்டுநராகப் பணிபுரியும் சேரன் தன் மேல் உள்ள களங்கத்தைத் துடைப்பதற்காக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இந்த உண்மைச் சம்பவமானது காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 20, 2008-ல் நடந்தது. இதயத்தை டொனேட் செய்தவரின் பெயர் ' A.P.ஹிதேந்திரன்'.

 

பிச்சைக்காரன் :

அனைவரின் மத்தியிலும் பெருமையாகப் பேசப்பட்ட படம்தான் பிச்சைக்காரன். இந்தப் படத்தின் கதை பணக்கார விஜய் ஆன்டனியின் அம்மா நோயால் படுத்த படுக்கையாகப் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பார். ஒரு சாமியாரை சந்திக்கும்போது 'நீ எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் உன் காசு, பணம், செல்வாக்கு எதையும் பயன்படுத்தாமல் 48 நாள் பிச்சைக்காரனாக இருந்து உன் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்' என்று கூறுவார். அதைக்கேட்டு விஜய் ஆன்டனியும் 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்ந்து அவரது அம்மா உயிரைக் காப்பாற்றுவார். கோயம்புத்தூரில் நடந்தது இந்தச் சம்பவம். 

 

குக்கூ :

கண் தெரியாத அழகான காதல் ஜோடியின் கதை. இருவருக்கும் நடக்கும் காதல், மோதல், காமெடி என அனைத்தையும் அழகாகக் காட்டியிருப்பார் இயக்குநர் ராஜூமுருகன்.   அவர் ஒரு பேட்டியில் கூறியது 'நான் பத்திரிகையாளராக இருக்கும்போது சந்தித்த காதல் ஜோடி இளங்கோ மற்றும் நந்தினியின் வாழ்க்கைதான் இந்தப் படம்'.

 

காதல் : 

பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர். படம் பார்த்தவர்கள் அனைவரும் உறைந்துபோகும் அளவிற்கு திரைக்கதையின் வீரியம் இருக்கும். சாதாரண பைக் மெக்கானிக் பரத், பணக்கார வீட்டுப் பெண்ணான சந்தியாவைக் காதலிப்பார். வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலையில் இருவரும் சென்னைக்கு நண்பனின் வீட்டுக்கு ஓடி வந்துவிட, சந்தியாவின் சித்தப்பா தன் அடியாட்களுடன் சேர்ந்து இந்த ஜோடியைக் கண்டுபிடிப்பார். அதற்கு முன்பே பரத்துக்கும் சந்தியாவுக்கும் திருமணம் முடிந்திருக்கும். சாதுரியமாகப் பேசி இருவரையும் தன் ஊருக்கு அழைத்துச் செல்லும் சித்தப்பா சந்தியாவின் அப்பாவிடம் இருவரையும் ஒப்படைக்க அதன்பின் நடக்கும் க்ளைமாக்ஸ் கொடூரம். திரையரங்கையே கலங்கச்செய்த அந்த முடிவுக்குப் பின்னான முடிவில்தான் இயக்குநர் மனிதாபிமானத்தின் உச்சம் தொட்டிருப்பார். சந்தியாவின் கணவராக வரும் நபரைத்தான் ஒரு ரயில் பயணத்தில் இயக்குநர் சந்திக்க அவர் வாழ்க்கையைக் கேல்விப்பட்டவர் இந்தப் படத்தை எடுத்தார்.

 

வழக்கு எண் 18/9 :

 இதுவும் பாலாஜி சக்திவேலின் படம்தான். சமூகத்திற்கான மெசேஜ் சொன்ன படம் விருதுகளை அள்ளியது. காதலித்த பெண் காதலை ஏற்றுக்க்கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடிக்கும் கொடூர நிஜத்தின் மீது எழுதப்பட்ட திரைக்கதை. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாலிபன் பக்கத்துவீட்டுப் பெண்ணின் மீது காதல் வயப்பட்டுக் காதலைச் சொல்ல அவளோ ஏற்க மறுக்க கோபத்தில் அவன் ஆசிட்டை  அவள் முகத்தில் அடிக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக அந்த வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பெண் மீது அடித்து விடுவார். இந்தப் படமும் உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

 

ஹரிதாஸ் :

2013-ல் கிஷோர் மற்றும் சினேகா நடிப்பில் G.N.R. குமாரவேலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் 'ஹரிதாஸ்'. மாற்றுத் திறனாளியான ஒரு மகனுக்கும் பொறுப்பான தந்தைக்கும் இடையிலான மலரும் அழகான அப்பா மகன் கதைதான்.  இந்தப் படத்தின் இயக்குநருக்கு 10 வருடங்களாக அந்தப் படத்தில்  ஹரிதாஸ் கேரக்டரில் வரும் பிரித்திவி ராஜைத் தெரியுமாம். ஆனால் அவருக்குப் படம் எடுக்கும் நோக்கம் ஏதும் இருந்ததில்லையாம். ஒரு கட்டத்தில் மக்களுக்கு சோசியல் மெசேஜாகத் தரலாம் என்று முடிவு செய்து சில கமர்சியல் விஷயங்களைச் சேர்த்து அந்தப் படத்தை இயக்கினாராம் இயக்குநர்.  

 

-தார்மிக் லீ

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்