Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்ஷா, மங்காத்தா, துப்பாக்கி...! - மாஸ் இன்டர்வெல் காட்சிகள்

மிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்தின் போக்கையும் நிர்ணயிச்சு, பாப்கார்ன் வாங்கப் போகலாமா வேணாமா? காபியை வாங்கிட்டுச் சீக்கிரம் வந்துடலாமா? இல்லை எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியே அப்படியே வெளியில ஓடிடலாமானு நம்மை முடிவெடுக்க வைப்பது படத்தோட இன்டர்வெல் ப்ளாக்தான். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த இன்டர்வெல் சீன்கள் தமிழ் சினிமாவில் எப்படி மாஸாகப் பயன்படுத்தப்பட்டுச்சுனு ஒரு ரவுண்ட் அப் போகலாமா? 

இன்டர்வெல் சீன்

 

பாட்ஷா :

முன்னொரு காலத்துல ரவுண்டானா கம்பத்துல கட்டி வெச்சுப் பொளந்ததுக்காக சூப்பர் ஸ்டார் ரிவெஞ்ச் எடுத்து ஆனந்தராஜை அதே இடத்திலேயே வெச்சுப் பிரிச்சு எடுப்பார். ஆட்டோக்காரர்கள் காலுக்கு அடியில் ஆனந்தராஜைத் தூக்கிப் போட்டுட்டு 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன சொன்ன மாதிரி'னு அடிக்குரல்ல டயலாக் சொல்றதுதான் இன்டர்வெல் ப்ளாக். அதுவரையும், மாணிக்கமா இருந்த ரஜினி பாட்ஷாவா மாறும் கெத்து மொமென்ட்டும் அதேதான். 

 

முதல்வன் : 

ஒரே ஒரு இன்டர்வியூவில் ஒழுங்காப் பேசி முடிச்சு விட்டிருந்தா, பேசாமல் டி.வி-யில் ஒளிபரப்பிட்டுப் போய்ட்டே இருந்திருப்பார் அர்ஜுன்.  'ஒரே ஒரு நாள்...'னு நெஞ்சிலிருந்து பேசி உசுப்பேத்திவிட்டு அர்ஜுனை சார்ஜ் எடுக்கவைப்பார் ரகுவரன். விறுவிறுப்பாகப் பறக்கும் கதையில் ரகுவரனைக் கைது செய்யச் சொன்னதும், 'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே... அடேங்கப்பா'ன்னு மணிவண்ணன் வாயைப் பிளக்கும் காட்சியில் இன்டர்மிஷன் கார்டு வரும். அடுத்து என்ன ஆகும்னு தெரிஞ்சிக்கப் பல பேர் ரெஸ்ட் ரூமுக்குப் போகாமல்கூட உட்கார்ந்திருந்த சீன் அது. 

 

 

மங்காத்தா :

அஜீத்தின் 50-வது படமான மங்காத்தாவில் இன்டர்வெல் சீன் அல்டிமேட்தான். மொத்தப் பணத்தையும் தனி ஆளாக அடிக்க ஆசைப்படும் அஜீத் தன்னுடன் இருந்த நால்வரையும் போட்டுத்தள்ள செஸ் போர்டு வைத்து ப்ளான் போட்டு 'மணி மணி மணி' என அரங்கம் அதிரச் சிரிக்க, பின்னணியில் யுவனின் பி.ஜி.எம் மோடு புல்லரிக்க வைக்கும். 'strictly no rules' எனக் கண்ணாடி தெறிக்க இன்டர்வெல் ப்ரேக். எ வெங்கட்பிரபு ப்ரேக். 

 

 

துப்பாக்கி : 

ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் காம்போவில் ஹிட்டடித்த 'துப்பாக்கி'யில் ராணுவ வீரர் விஜய், ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவரையும் ஒரே நேரத்தில் தனது சகாக்களின் உதவியோடு போட்டுத்தள்ளி வில்லனுக்குத் தண்ணி காட்ட, ஆக்ரோஷமான வில்லன், 'இஃப் ஐ ஃபைண்ட் யூ, ஐ வில் கில் யூ' எனச் சவால் விட, இளையதளபதி சிம்பிளாக 'ஐ யம் வெய்ட்டிங்' எனச் சொல்லித் தலையாட்டுவார். அங்கே பி.ஜி.எம்-மோடு இன்டர்வெல் போடுவார்கள். அதற்குப் பிறகு அந்த டயலாக்கே மாஸ் பன்ச் ஆனதெல்லாம் தனிக்கதை. 

 

 

 

ஜிகர்தண்டா :

கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா'வில் படம் எடுப்பதற்காக வில்லன் பாபி சிம்ஹாவை நண்பன் கருணாகரனோடு சேர்ந்து ஃபாலோ செய்யும் சித்தார்த், பாபி சிம்ஹா பேசுவதை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருக்க, அதைக் கண்டுபிடித்த பாபி சிம்ஹா அவர்களைத் தேடிச்சென்று வீட்டின் முன் நிற்பார். அவசரமாகத் தப்பிச்செல்ல வீட்டுக் கதவைத் திறக்கும் சித்தார்த், எதிரில் துப்பாக்கிச் சத்தம். இன்டர்வெல் கார்டு போட, அடுத்த பாதிப்படத்தில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் மெர்சல் இன்டர்வெல் அது. 

 

 

- விக்கி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்