'தொலைபேசி மிரட்டலால் இடம் மாற்றம்!' - விஷால் | Vishal interview about actor association meeting venue change

வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (26/11/2016)

கடைசி தொடர்பு:19:16 (26/11/2016)

'தொலைபேசி மிரட்டலால் இடம் மாற்றம்!' - விஷால்


லயோலா கல்லூரியில் பொது குழுவை நடத்த  கூடாது என சிலர் தொலைபேசியில் மிரட்டியதால் இடத்தை மாற்றியுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்   

தினம்  ஒரு புகாருடன் நடக்குமா நடக்காத  என எதிர்பார்க்கபட்டு வந்த  நடிகர்  சங்க பொது  குழு  காவல் துறை அனுமதி காரணமாக நடிகர் சங்க வளாகத்தில் நடை பெறும் என்று நடிகர் விஷால் அறிவித்து உள்ளார் . லயோலா கல்லூரியில் நடைபெறுவதாக  இருந்த பொது  குழுவிற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதியை  ரத்து செய்ததை அடுத்து   இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.


நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாககள் பொறுப்பு ஏற்றத்தில்  இருந்தே பிரச்சனையும் தொடந்து  வருகிறது .ஊழல் புகார்கள் விமர்சனங்கள் என முதலில் காவல் நிலையதில் புகார் அளித்தது    நீதிமன்ற வழக்குகள் என சொல்ல முடியாத இடியாப்ப சிக்கலில் சிக்கி  தவித்தது நடிகர்  சங்கம்.

இந்த நிலையில் தான்  வரும் 27 ம் தேதி லயோலா கல்லுரியில் நடிகர் சங்க பொது குழு நடத்தப்படும் என அறிவிக்க அதற்கும் சிலர் கட்டையை போட்டனர்.பசுமை  பாரதம்  என்கிற அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் சுஜித்தா சார்பில் இது  குறித்து உயர்  கல்வி  துறை,லயோலா  நிர்வாகம்,சென்னை காவல்  துறை ஆணையர் ஆகியோரிடம்  பொது  குழுவை கல்லூரியில் நடத்த  கூடாது என புகார் அளிக்கப்பட்டது 

 

 ஒரு கல்வி கூடத்திற்குள் இது போன்ற சங்கங்களின்  பொது  குழுவை நடத்துவதை அனுமதிக்க முடியாது. பொது  குழுவிற்கு நடிகர்  என்கிற  போர்வையில்  ரௌடிகளும் ,அரசியல்வாதிகளும்  கல்லூரிக்குள்  வருவதால்  தேவையில்லாத சட்டம்  ஒழுங்கு  பிரச்சனை ஏற்படும் 

நடிகர்  நடிகையை  பார்க்க  பெரும் கூட்டம் கூடுவதால் விடுதியில் தங்கியுள்ள 5 ஆயிரம் மாணவர்களின்  கல்வி  பாதிக்கப்படும்.மேலும் புதிதாக  தேர்ந்து  எடுக்கபட்டுள்ள நிர்வாகிகள்  மீது ஊழல் குற்றசாட்டு உள்ளதாக பத்திரிகைகளில்  செய்தி வெளியாகி  உள்ளது. இது பொது  குழு  கூட்டத்தில் பிரச்சனையாக வெடித்து மோதலாக மாற  வாய்ப்பு  உள்ளது. 

அது போன்ற சூழல்  ஏற்பட்டால் அது கல்லூரி சூழலுக்கு  கெட்ட  பெயரை  ஏற்படுத்தும். இது எல்லாம்  தெரிந்து  தான்  லயோலா கல்லூரி நிர்வாகம் அனுமதி  கொடுத்தார்களா  என்று  தெரியவில்லை. நடிகர்  சங்கத்திடம்  இல்லாத  பணமா அவர்களுக்கு  என்று சொந்தமான  இடத்தில் பந்தல்  போட்டு பொது  குழுவை  நடத்தி  கொள்ளவேண்டும் என்று  சுஜிதா என்பவர் நிர்வாகத்திற்கும்,கல்வி துறைக்கும்,கமிஷனர் அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினார். பின்னர் நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்து இருந்தார் 

இதே போன்று  தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவர் புகார் ஒன்றை அளித்து இருந்தார் அதில்   சென்னை லயோலா கல்லூரியில் தினமும் ஏதாவது தேசிய அளவில் கருத்தரங்கள் நடக்கிறது.  உதாரணமாக டிசம்பர் 5மற்றும் 6ம் தேதிகளில் P&G Research Department of advanced Zoology and Biotechnology என்ற பெயரில் நடக்க இருக்கும், தேசிய அளவிலான கருத்தரங்கத்தில், கலந்து கொள்ளுபவர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.  ஆனால் இந்த கருத்தரங்கரத்திற்கு கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அளிக்கப்படும் மின் கட்டண சலுகையின் படி அளிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கடந்தாண்டும் லயோலா கல்லூரியில் நடந்தது,  தற்போது நவம்பர் 27ம் தேதி பொதுக்குழு நடக்க உள்ளது.  கடந்தாண்டு நடத்தப்பட்ட பொதுக்குழுவிற்கு மின் கட்டண சலுகையின் படி அளிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். நவம்பர் 27ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு சலுகை விலை மின்சாரத்தை பயன்படுத்துவார்கள்.

  கடந்த ஆறு ஆண்டுகளில் லயோலா கல்லூரி நிர்வாகம் தேசிய அளவில் நடத்தப்படும் கருத்தரங்ம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும்( தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு உள்பட) தற்காலிக மின் இணைப்பு(வணிக ரீதியாக) பெறவில்லை. ஜெனரேட்டரும் பயன்படுத்தவில்லை.

  அதனால் லயோலா கல்லூரியில் கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார பயன்படுத்திய, மின் அளவை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்.  சலுகை விலை மின்சாரத்தை, பயன்படுத்தி மின்சாரவாரியத்திற்கு இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

. சலுகை விலை மின்சாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பை, பல மடங்கு அபராதத்தொகையுடன் வசூல் செய்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல் அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். 

  தனியார்(சுய நிதி) கல்வி நிறுவனங்கள் முறைகேடாக மின் கட்டண சலுகையை பயன்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு கடந்த பத்தாண்டுகளில் சுமார் ரூ500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது..
   தனியார்(சுய நிதி) கல்லூரிகளில் நடக்கும் தேசிய கருத்தரங்கம் மற்றும் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு மின்சாரவாரியம் அளிக்கும் சலுகை விலை மின்சாரத்தை பயன்படுத்த தடை விதிக்க உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்.என்று புகார் அனுப்பி உள்ளனர்.  இதை  வழக்காகவும்  நீதி மன்றத்தில் அளித்து இருந்தார்  வழக்கை  விசாரித்த நீதி  மன்றம் கல்லூரிகளில்  இது போன்ற  பொது நிகழ்ச்சிகளை நடத்த  கூடாது என உத்தரவு  பிறப்பித்தது  

இந்த நிலையில்  தான்  கூடுதல்  பாதுகாப்பு கேட்டு நடிகர் சங்க  நிர்வாககள் கடந்த  வாரம்  கமிஷனர் அலுவலகம் புகார் அளித்து இருந்தனர் நடிகர் சங்க விவாகரத்தால் சிக்கலில்  மாட்டி  கொண்ட கல்லூரி  நிர்வாகம் பொது குழுவிற்கு  அளித்த அனுமதியை ரத்து செய்து உள்ளது. இது  குறித்து  கல்லூரி நிர்வாகத்திடம்பேசிய  போது கல்லூரிக்குள்  பொது  குழுவை  நடத்த  கூடாது  என நிர்வாகம் முடிவு செய்து உள்ளது . இதற்கான பொது குழுவிற்கான அனுமதியை ரத்து செய்து கடிதத்தை  நேற்றே  நடிகர்  சங்கத்திடம்  கொடுத்து   விட்டோம். நேரிலும்  இது குறித்து அவர்களுக்கு தகவல் அனுப்பி  விட்டோம் என்று கூறினார். 

 

அனுமதி ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த  நடிகர் சங்க நிர்வாகிகள் உடனடியாக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பொது குழுவை வேறு இடத்திற்கு மாற்றி தர அனுமதி கேட்டு மனு  அள்ளித்தனர். பின்னர் இது குறித்து  செய்தியாளர்களை  சந்தித்த நடிகர் விஷால் நடிகர் சங்க பொது குழு அதன்  சொந்த  நிலத்திலேயே நடக்கும் லயோலா  கல்லூரியில்  நடத்த காவல்  துறை அனுமதி மறுத்து  விட்டதால் இந்த முடிவை எடுத்து உள்ளோம் . 

இங்கு நடத்த அனுமதி தருவதோடு முழு  பாதுகாப்பும் அளிப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்,இது முன்பே எடுத்த முடிவு  தான் சிலர் செய்த செயலால் மீண்டும்  இங்கேயே வந்து இருக்கிறோம். வெளியூர்களில்  இருந்து உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து  கொள்ள  வந்து  கொண்டு இருகின்றனர் அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

 திட்டமிட்ட படி நாளை  பொது குழு நடக்கும். பொது குழுவிற்கு அனுமதி அளிக்க கூடாது என  லயோலா  நிர்வாகத்தை  சிலர் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர். அதனால்  தான்  காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. அவர்களின் பேச்சை மதித்து தான் இடத்தை நாங்கள்  மாற்றினோம்.ஆனால்  ஒன்று சொல்லி கொள்கிறோம் யார் எவ்வளவு இடஞ்சல் கொடுத்தாலும் உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கிற வரை ஓய மாட்டோம். இன்று இரவுக்குள் இந்த இடத்தை எப்படி மாற்றுகிறோம்  பாருங்கள் என  தெரிவித்தார். இது குறித்து  நடிகர் சங்க  நிர்வாகிகள் அவசர ஆலோசனை  கூட்டத்தை  உடனடியாக நடத்தவுள்ளனர்

 இதற்கும் உடனடியாக எதிப்பை தெரிவிக்க  ஆரம்பித்து  விட்டனர் தென்னிந்திய நடிகர் சங்கம் பொது குழு கூட்டம்,தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு,மாநகராட்சி மற்றும் மின்சார அனுமதி பெறாமல்,விதிமுறைகளை மீறி நடத்தவுள்ளதால்  பத்திரிகையாளர் வாராகி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடமும் மற்றும் மாநில காவல்துறை தலைவரிடமும் புகார் அளிக்கவுள்ளார்

பொது குழு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட இடத்தில் நடக்கும் பொதுக் குழு கூட்டம்தான் செல்லு படியாகும் என்றும் திடீரென்று இடம் மாற்றி நடத்தும் கூட்டத்திற்கு சட்டபடியான அங்கீகாரம் கிடையாது அங்கு எந்த தீர்மானம்  நிறைவேற்றினாலும் அது செல்லாது என்று  முன்னாள் நிர்வாகி  தரப்பில்  தெரிவிக்கபட்டுள்ளது.

பொது குழுவிற்கே ,முன்பே  இத்தனை  கலவரங்கள் என்றால்  நாளை பொது குழுவில்  என்ன நடக்குமோ  என்று  குழப்பத்தில் உள்ளனர்  நடிகர் சங்க  உறுப்பினர்கள் .  

பிரம்மா 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close