வெள்ளியங்கிரி அங்கிள், சித்ரா கோஷல்... - சினிமாவுல இவங்கதான் சூப்பர் சிங்கர்ஸ்!

இது சூப்பர் சிங்கர்களின் காலம். நம்ம தமிழ் சினிமாவில் பாட்டுப்பாடி நம்மளைத் தெறிக்கவிட்ட சில சூப்பர் சிங்கர்களைலாம் பார்க்கலாமா மக்களே?

* காலையில 11 மணிக்கு மேல சும்மாதான் இருக்கிறேன். அதான் சங்கீதம் கத்துக்கலாம்னு வந்தேன்னு கவுண்டமணிக்கிட்ட கத்துக்க வர்ற கசாப்புக்கடை பாய் பாடுகிற 'பால் இருக்கி பழம் இருக்கி'ங்கிற பாட்டை எப்போ கேட்டாலும் பாலும் பழமும் ஞாபகத்துக்கு வரும்ல.

* இந்த வெள்ளியங்கிரி அங்கிளை யாராலதான் மறக்க முடியும். பாட்டுப்பாடியே எல்லார் வீட்டுக்கதவையும் பதறிப்போயி சாத்த வெச்ச பெருமை இவரோடதுதானே. ஹவுஸ் ஓனர்ங்கிறதால அதையெல்லாம் தாங்கிக்கிட்டு விஜய்யும், சார்லியும் அவரோட சேர்ந்துகிட்டு அடிக்கிற லூட்டிகள்லாம் சும்மா அதகளமா இருக்கும்.

* 'மாப்பிள்ளை' படத்துல தனுஷோட முறைப்பொண்ணு அருக்காணி பாட்டுப்பாடி பண்ற அலப்பறைகள்தான் இது. அதுக்கு தனுஷின் ரியாக்‌ஷன்ஸ்லாம் முடியலைப்பா... கொஞ்சம் காப்பாத்துங்க ரகம்!

* என்னோட லவ்வரு சாம் ஆண்டர்சன்னு அமலாபால் கதைவிட அவருக்கே தெரியாம அவரைக் கூட்டிவந்து விஜய், அமலாபாலுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்க சாம் பாட்டுப்பாடி நமக்குக் கொடுப்பார் பாருங்க ஒரு ஷாக் .அவ்வ்வ்.

* 'சேட்டை' படத்துல நடிகையாக வரும் சுஜா வருணியை இன்டர்வியூவில் பாட்டுப் பாடச்சொல்ல, வரும் பாருங்க ஒரு பாட்டு 'கடிச்சுக்கிட்டு குடிச்சுக்கவா... குடிச்சுக்கிட்டு கடிச்சுக்கவா`..னு. அதெல்லாம் நவக்கிரக லெவலு!

* 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துல சந்தானம் பாதியில பாட்டை மறந்த மாதிரி ஆக்ட் பண்ண பார்வையாளராக இருந்த வி.டி.வி. கணேஷ் திடீர்னு பாடகராக ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆகி பாட்டை விட்ட இடத்துல இருந்து அப்படியே கன்டினியூ பண்ணுவார். ஹ்ம்ம்.. என்னத்த சொல்ல?

'அழகுராஜா' படத்துல சித்ராதேவிப்பிரியாவாக வருவாங்க காஜல் அகர்வால். அவங்க பாடப்போறதைப் பார்க்க ஆவலோட காத்திருப்பார் கார்த்தி. 'அந்த நேரம் அந்திநேரம்' ங்கிற 'விடிவி' படத்துப் பாட்டை ஸ்டேஜ்ல ஏறி ஏதோ ஸ்கூல்ல மனப்பாடப் பாட்டு பாடுகிற மாதிரி பாடி கார்த்திகிட்ட மொக்கை வாங்குவாங்க காஜல். ஙே!

* அவங்கதான் அப்படின்னா  'தொடரி' படத்துல சித்ராவுல பாதி ஸ்ரேயா கோஷல்ல மீதினு தன்னை சித்ராகோஷலாக நினைச்சுக்கிட்டு கீர்த்தி சுரேஷ் 'தெய்வீக ராகம்' பாட்டை தனுஷ்கிட்ட பாடிக் காட்டுகிற சீன்தான் இது. என்ன ஒண்ணு, ஒரிஜினல் பாட்டை பாடுன ஜென்ஸிதான் பாவம்!.

 

-  ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!